‘கண் இமைக்கும் நொடியில் மாற்றம் இருக்கு… தமிழகம் இன்னும் காத்திருக்கு தலைவா’… ரஜினி ரசிகர்கள் ஒட்டிய போஸ்டரால் பரபரப்பு..!

Author: Vignesh
5 November 2022, 9:27 pm
Rajini - updatenews350
Quick Share

திண்டுக்கல் : மீண்டும் ரஜினியை அரசியலுக்கு இழுக்கும் வகையில் திண்டுக்கல் நகர் பகுதிகளில் ரசிகர்கள் ஒட்டிய போஸ்டர்களால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

திண்டுக்கல் மாவட்ட ரஜினி ரசிகர்கள் சார்பில் டிசம்பர் 12 அன்று ரஜினிகாந்த் பிறந்தநாளை முன்னிட்டு போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது. அதில் கண் இமைக்கும் நொடியில் மாற்றம் இருக்கு. தமிழகம் இன்னும் காத்திருக்கு தலைவா என்ற வாசகம் இடம் பெற்றுள்ளது.

மீண்டும் ரஜினியை அரசியலுக்கு இழுக்கும் வகையில் திண்டுக்கல் பேருந்து நிலையம், நாகல் நகர், மெயின் ரோடு உள்ளிட்ட நகர் பகுதிகளில் ரசிகர்கள் ஒட்டப்பட்ட போஸ்டர்களால் பரபரப்பு ஏற்பட்டது.

நடிகர் ரஜினிகாந்த் தனது அரசியல் நிலைப்பாட்டை தெளிவாக அறிவித்த பின்னரும், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் அவரது படங்கள் வெளியாகும் சமயங்களிலும், அவரது பிறந்தநாளிலும் ரசிகர்கள் சார்பில் போஸ்டர்கள் ஒட்டப்படுவது வழக்கம்.

தற்போது ரஜினிகாந்த் ஜெயிலர் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை தொடர்ந்து மேலும் 2 படங்களில் நடிக்க ஒப்பந்தம் ஆகிஉள்ளார். இந்நிலையில் ரஜினிகாந்த் அரசியலுக்கு வரவேண்டும் என்ற கருத்தில் திண்டுக்கல் நகரின் பல்வேறு பகுதிகளில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்கள் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Views: - 410

0

0