கொரோனா தடுப்பூசி செலுத்துவதில் கடை உரிமையாளர்கள், ஊழியர்களுக்கு முன்னுரிமை : சென்னை மாநகராட்சி ஆணையர்…!

3 July 2021, 7:42 pm
Chennai Commissioner - Updatenews360
Quick Share

சென்னை : கொரோனா தடுப்பூசி செலுத்துவதில் கடை உரிமையாளர்கள், ஊழியர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என சென்னை மாநகராட்சி ஆணையர் ககன் தீப்சிங் பேடி தெரிவித்துள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங், மக்கள் கூட்டமாக கூடுவதை தவிர்க்க கண்காணிப்பு தீவிரப்படுத்தப்படும். நாளை மறுநாள் முதல் கூடுதல் தளர்வுகள் அளிக்கப்பட்டாலும், பாதுகாப்பு விதிமுறைகளை பின்பற்றவும், ஜவுளி, நகைக் கடை ஊழியர்கள் அனைவரும் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என தெரிவித்தார்.

ஊழியர்களுக்கு தடுப்பூசி போடுவதை அதிகரிக்கும்படி கடை உரிமையாளர்களுக்கு அறிவுறுத்தி உள்ளோம். கொரோனா தடுப்பூசி செலுத்துவதில் கடை உரிமையாளர்கள், ஊழியர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என தெரிவித்தார்.

மேலும் சென்னையில் முக கவசம் அணியாமல் திருமணத்தில் பங்கேற்றவர்களுக்கு ரூ.84 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டதாக தெரிவித்தார்.

Views: - 111

0

0