குடிக்கறதுக்கு முன்னாடியே இப்படியா.! சிலம்பாட்டம் ஆடி வியக்க வைத்த மதுப்பிரியர்.!

7 May 2020, 1:33 pm
Ramnad Silambu - Updatenews36
Quick Share

ராமநாதபுரம் : கமுதியில் டாஸ்மார்க் கடை திறக்கப்பட்டவுடன் வரிசையில் நின்றிருந்த மதுப்பிரியர் ஒருவர் உற்சாகத்தில் சிலம்பாட்ட நடனமாடி வியக்க வைத்தார்.

ராமநாதபுரம் மாவட்டம் கமுதியில் இன்று அரசு டாஸ்மார்க் மது கடை திறக்கபட்டதையடுத்து மதுபிரியர்கள் உற்சாகமடைந்து சிலம்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தபட்டுள்ளதால் அரசு டாஸ்மார்க் மதுக்கடைகள் அனைத்தும் கடந்த 40 நாட்களுக்கு முன் மூடப்பட்டது

இந்த நிலையில் தமிழக அரசு டாஸ்மார்க் கடைகளை இன்று முதல் மதியம் 12 மணிக்கு பதிலாக காலை 10 மணிக்கு திறந்து மாலை 5 மணி வவை திறந்து விற்பனை செய்ய உத்தரவிட்டது.

இன்று டாஸ்மார்க் கடை திறக்கபட உள்ளதையடுத்து மது பிரியர்களை இன்று அதிகாலையில் கடைகளுக்கு முன்பாக வந்து வரிசையில் நிற்க துவங்கினர். கமுதி குண்டாற்று கரையோரத்தில் நீண்ட வரிசையில் நின்று பல்வேறு நிபந்தனைகளுடன் மதுபாட்டில்களை மதுப்பிரியர்கள் வாங்கி சென்றனர்.

அப்போது வரிசையில் நின்ற முன்னாள் ராணுவ வீரர் குருசாமி மதுக்கடையை திறந்தவுடன் உற்சாகமடைந்த அவர் தான் ஏற்கனவே வைத்திருந்த சிலம்பு கம்பை வைத்து சிலம்பாட்டம் நடனமாடி அனைவரையும் வியப்பை ஏற்படுத்தினார்.