பணம் படுத்தும் பாடு: இளம் பெண்களை தவறான பாதைக்கு அழைக்கிறாரா பிரபல நடிகை.?இன்ஸ்டா பதிவால் சர்ச்சை..!

Author: Rajesh
6 May 2022, 11:21 am
Quick Share

சமீபகாலமாக நடிகைள் தங்களது இன்ஸ்டாகிராம் பக்கங்களில் பல்வேறு தயாரிப்புகளை விளம்பரம் செய்து பணம் சம்பாதித்து வருகின்றனர். தற்போது தமிழ் முன்னணி நடிகைகளான பூஜா ஹெக்டே, ராய் லட்சுமி, சமந்தா, ஹன்சிகா உள்ளிட்டோர் தங்களது இன்ஸ்டாகிராம் பக்கங்களில் விளம்பரம் செய்து வருகின்றனர்.

சமூகவலைத் தளப்பக்கங்களிலும் ஆக்டிவாக செயல்பட்டு நடிகர், நடிகைகள், சமூக வலைதளங்கள் மூலம் தங்களுடைய ரசிகர்களுடன் நேரடியாக உரையாடுவது, தங்களுடைய போட்டோஷுட் புகைப்படங்களை வெளியிடுவது என தங்களுக்கு ஏற்ற வகையில் அவர்கள் பயன்படுத்தி வருகின்றனர்.

அந்த வகையில் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அதிகம் பின்தொடர்பவர்களை வைத்திருக்கும் சில நடிகைகள் சிலர் மக்களுக்கு சிறிதும் பயன்படாத பொருள்களை விளம்பரபடுத்தும் வகையில், புகைப்படங்களை பதிவிட்டு வருகின்றனர். அந்த வகையில் தற்போது கேடி பில்லா கில்லாடி ரங்கா, மாநகரம் போன்ற படங்களில் நடித்து தமிழ் சினிமாவில் நல்ல வரவேற்பு பெற்ற நடிகை ரெஜினா, அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சர்ச்சைக்குரிய புகைப்படத்தினை பதிவிட்டுள்ளார்.

இன்ஸ்டாகிராமில் 1.8 மில்லியன் ரசிகர்களை கொண்டு இருக்கும் ரெஜினா மதுபான விளம்பரத்தில் நடித்து இருக்கிறார். அதன் போட்டோவை ரெஜினா இன்ஸ்டாவில் பதிவிட நெட்டிசன்கள் பலரும் கோபத்துடன் கமெண்ட் செய்து வருகின்றனர். அதில் ஒருவர், “சிறு குழந்தைகளும், இளம் பெண்களும் உங்களுக்கு ரசிகர்களாக இருக்கின்றனர். அவர்களை மோசமான பாதைக்கு அழைத்துச் செல்ல வேண்டாம்” என்று பதிவிட்டுள்ளார்.

Views: - 981

1

1