‘பணத்த எடு.. இல்ல காலி பண்ணிடுவேன்’ : Chair-ல் உட்கார்ந்து கத்தியை காட்டி பணம் பறித்த ரவுடி!!

Author: Babu Lakshmanan
1 September 2022, 4:02 pm
Quick Share

தஞ்சை : கும்பகோணம் அருகே ஹோட்டல் உரிமையாளரிடம், நாற்காலி போட்டு ஒய்யாரமாக உட்கார்ந்து கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்த ரவுடியை காவல்துறையினர் கைது செய்தனர்.

கும்பகோணம் அருகே சோழபுரம் பகுதியை சேர்ந்தவர் ஜெகபர் அலி (46). இவர் சோழபுரம் மெயின் ரோட்டில் ஹோட்டல் நடத்தி வருகிறார். இவரது ஹோட்டலுக்கு இராமானுஜபுரத்தை சேர்ந்த கவியரசன் (22). ஹோட்டலில், வெங்காயம் நறுக்குவதற்காக வைத்திருந்த கத்தியை எடுத்துக்கொண்டு, கடை உரிமையாளர் ஜெகபர் அலியிடம் சென்றார்.

அங்கு ஜெகபர் அலியின் அருகில் நாற்காலி போட்டு ஒய்யாரமாக உட்கார்ந்து கொண்டு, பணம் தர வேண்டும், இல்லையெனில் கடையை காலி செய்து விடுவேன் என மிரட்டி 500 ரூபாயை பறித்து சென்றார்.

இதையடுத்து, ஜெகபர் அலி அளித்த புகாரின் போரில், சோழபுரம் காவல்துறையினர் கடையில் இருந்த சி.சி.டி.வி., கண்காணிப்பு கேமரா காட்சியை அடிப்படையாக வைத்து, கவியரசனை கைது செய்தனர். இவர் மீது பல்வேறு காவல் நிலையத்தில் வழக்குகள் நிலுவையிலும், ரவுடி பட்டியலிலும் உள்ளது. இச்சம்பவத்தால் அப்பகுதியில் உள்ள வணிகர்கள் பலரும் அச்சமடைந்துள்ளனர்.

Views: - 473

0

0