அதிமுக கொடியும், பொதுச்செயலாளர் பதவியும் : சர்ச்சையை ஏற்படுத்திய சசிகலாவின் அறிக்கை!!!
24 February 2021, 4:49 pmசென்னை : அதிமுக கொடியுடன் சசிகலா அறிக்கை வெளியிட்டு பொதுச்செயலாளர் எனவும் தெரிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சொத்துக்குவிப்பு வழக்கில் 4 வருட சிறை தண்டனை பெற்று பெங்களூரு அக்ரஹாரா சிறையில் இருந்து சமீபத்தில் விடுதலையானார். இந்த நிலையில் உடல்நலக்குறைவு காரணமாக பெங்களூரு விக்கேடாரியா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் குணமடைந்து வீடு திரும்பினார்.
அதன் பின்னர் தமிழகம் வந்த அவர் எந்த நிகழ்ச்சியில் பங்கேற்காமல் இருந்தார். ஆனால் தீவிர அரசியலில் ஈடுபடுவேன் என கூறியிருந்த அவர், இன்று மறைந்த ஜெயலலிதாவின் பிறந்தநாளை முன்னிட்டு அவரது உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
பின்னர் நிகழ்ச்சியில் பேசிய சசிகலா, உடன்பிறப்புகள் அனைவரும் ஒன்றிணைந்து அதிமுக வெற்றி பாடுபட வேண்டும் என்றும், ஆட்சியமைப்போம் என சசிகலா பேசியிருந்தார்.
இந்த நிலையில் தற்போது சசிகலா சார்பில் அறிக்கை ஒன்று வெளியாகியுள்ளது. அதில் அதிமுக கொடியுடனும், தான் அதிமுக பொதுச்செயலாளர் என கூறியிருப்பதும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
அந்த அறிக்கையில், ‘ஜெயலலிதாவின் பிறந்தநாளை முன்னிட்டு அவரது உருவப்படத்திற்கு அதிமுக பொதுச்செயலாளர் சின்னம்மா மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்‘ என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தன்னைத்தானே அதிமுகவின் பொதுச்செயலாளர் என சசிகலா அறிவித்து, அறிவிப்பை வெளியிட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சசிகலா தன்னை அதிமுக பொதுச்செயலாளர் என தொடர்ந்த வழக்கு வரும் 15ஆம தேதி விசாரணைக்கு வரவுள்ளது நினைவுகூரத்தக்கது.
0
0