சாத்தான்குளம் இரட்டைக் கொலை சம்பவம் : 5வது முறையாக முருகனின் ஜாமீன் மனு ஒத்திவைப்பு..!

1 September 2020, 2:09 pm
HC Madurai 01 updatenews360
Quick Share

சாத்தான்குளம் இரட்டைக் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள காவலர் முருகனின் ஜாமீன் மனு மீதான விசாரணை 5வது முறையாக ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. செய்யப்பட்டுள்ளது.

ஊரடங்கை மீறி கடை வைத்ததாகக் கைது செய்யப்பட்ட வியாபாரிகள் ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோர் போலீசாரின் தாக்குதலில் உயிரிழந்தனர். இது தொடர்பாக, சம்பவத்தன்று பணியில் இருந்து காவல் ஆய்வாளர் ஸ்ரீதர், எஸ்ஐக்கள் ரகு கணேஷ், பாலகிருஷ்ணன், முருகன் உள்பட 10 காவலர்கள் மதுரை சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவத்தை இரட்டை கொலையாக வழக்குப்பதிவு செய்து சிபிஐ விசாரித்து வருகிறது. இதனிடையே, இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள காவலர்களில் ஒருவரான சிறப்பு உதவி ஆய்வாளர் பால்துரை, கொரோனாவால் பாதிக்கப்பட்டு அண்மையில் உயிரிழந்தார்.

இந்த நிலையில், தங்களுக்கு ஜாமீன் வழங்கக் கோரி காவலர் முருகன் தாக்கல் செய்த ஜாமீன் மனு மீதான விசாரணையை மதுரை மாவட்ட முதன்மை நீதிமன்றம் செப்.,4ம் தேதிக்கு ஒத்திவைத்தது. இதன்மூலம், 5வது முறையாக விசாரணை ஒத்தி வைக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

Views: - 7

0

0