சுயட்சை வேட்பாளரை ஆதரித்து வாக்கு சேகரித்த செந்தில் கணேஷ்-ராஜலட்சுமி தம்பதியினர்…

Author: kavin kumar
16 February 2022, 2:41 pm
Quick Share

திண்டுக்கல் : திண்டுக்கல் மாநகராட்சி இரண்டாவது வார்டில் போட்டியிடும் சுயட்சை வேட்பாளரை ஆதரித்து விஜய் டிவி புகழ் சூப்பர் சிங்கர் டைட்டில் வின்னர் செந்தில் கணேஷ், ராஜலட்சுமி தம்பதியினர் பொதுமக்களிடையே பாட்டு பாடி தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுப்பட்டனர்.

தமிழகத்தில் வருகின்ற 19ஆம் தேதி ஒரே கட்டமாக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் திமுக ,அதிமுக, பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளை சேர்ந்த வேட்பாளர்கள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். திண்டுக்கல் மாநகராட்சி 48 வார்டுகளில் போட்டியிடக் கூடிய ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி வேட்பாளர் கள் புதுபுது உத்திகளை கையாண்டு வாக்காளர்களை கவரும் விதமாக துண்டு பிரசுரங்களை விநியோகம் செய்து தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஆளுங்கட்சி, எதிர்க்கட்சியினருக்கு இணையாக சுயேச்சையாக மாநகராட்சி இரண்டாவது வார்டில் போட்டியிட கூடிய சந்தோஷ் முத்து என்ற வேட்பாளர் விஜய் டிவி சூப்பர் சிங்கர் புகழ் டைட்டில் வின்னர் செந்தில் கணேஷ் ராஜலட்சுமி யை வரவழைத்து வாக்காளர்கள் மத்தியில் தெம்மாங்கு பாட்டு மற்றும் சினிமா பாடல்களை பாட வைத்து பொதுமக்களாகிய வாக்காளர்களிடம் நூதன முறையில் தென்னைமர சின்னத்திற்கு தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். சூப்பர் சிங்கர் டைட்டில் வின்னர் ராஜலட்சுமி செந்தில் கணேஷ் சை பார்ப்பதற்காகவே வழிநெடுகிலும் ஆரத்தி எடுத்து பூத்தூவி அப்பகுதி மக்கள் வரவேற்பு அளித்தனர்.

Views: - 749

0

0