சீர்காழி இரட்டைக் கொலை, கொள்ளை வழக்கு : கையில் மாவுக்கட்டோடு நீதிமன்றத்தில் குற்றவாளிகள் ஆஜர்!!

28 January 2021, 3:38 pm
Sirkazhi Culprits- Updatenews360
Quick Share

மயிலாடுதுறை : சீர்காழி இரட்டை கொலை வழக்கில் சம்பந்தமுடைய குற்றவாளிகள் இரண்டு பேரை சீர்காழி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய நிலையில் பிப்ரவரி 11-ஆம் தேதி வரை சிறையில் அடைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் வசித்து வரும் தனராஜ் என்பவரது வீட்டில் நேற்று புகுந்த கொள்ளையர்கள் தன்ராஜ் மனைவி மற்றும் மகனை வெட்டிக் கொன்றனர். அவர்கள் நடத்திய தாக்குதலில் தன்ராஜ் மற்றும் அவரது மருமகள் நிகில் பலத்த காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தப்பியோடிய கொள்ளையர்களை எருக்கூர் அருகே வயல்வெளியில் வைத்து காவல்துறையினர் பிடித்தனர். இதில் மணிப்பால் என்ற கொள்ளையன் சுட்டு கொல்லப்பட்டான். மணிஷ், ரமேஷ் பாட்டில் ஆகிய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

மேலும் கருணாராம் என்ற கொள்ளையனை கும்பகோணத்தில் காவல்துறையினர் கைது செய்தனர். கருணா ராமிடம் காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை செய்து வரும் நிலையில் இன்று கோர்ட்டில் ஆஜர்படுத்துவதற்காக கைதிகள் ரமேஷ் பாட்டில், மணி ஆகியோருக்கு கொரோனா பரிசோதனை செய்ய சீர்காழி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

இதனிடையே கொள்ளையர்கள் மணிஷ் மற்றும் ரமேஷ் பாட்டில் ஆகியோர் காவல் நிலையத்தில் வழுக்கி விழுந்ததில் காயம் ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து சீர்காழி நீதித்துறை நடுவர் இரண்டாம் எண் பொறுப்பு வகிக்கும் திருமதி அமிர்தம் முன் ரமேஷ் மற்றும் மணிஷ் ஆகியோர் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்கள் இருவரையும் வரும் பிப்ரவரி 16ஆம் தேதி வரை சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார்

Views: - 0

0

0