பாடை கட்டி ஒப்பாரி வைத்து நூதன போராட்டம்… கள்ளச்சாராயத்தால் செத்து மடிந்த உயிர்கள்… திமுக அரசைக் கண்டித்து அதிமுகவினர் ஆர்ப்பாட்டம்!!

Author: Babu Lakshmanan
29 May 2023, 2:02 pm
Quick Share

கள்ள சாராய விவகாரம், ஊழல் முறைகேடு, சட்டம் ஒழுங்கு சீர்கேடு உள்ளிட்டவற்றை கண்டித்து நெல்லையில் அதிமுகவினர் போராட்டம் நடத்தினர்.

அதிமுகவின் சார்பில் தமிழ்நாடு முழுவதும் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. குறிப்பாக ஊழல் முறைகேடு, கள்ளச்சாராய விவகாரம், சட்டம் ஒழுங்கு சீர்கேடு உள்ளிட்டவற்றை கண்டித்து நெல்லையில் மாவட்ட செயலாளர் தச்சை கணேசராஜா தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.

அந்த வகையில் திருநெல்வேலி வண்ணாரப்பேட்டையில் அதிமுகவினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். குறிப்பாக கள்ளச்சாராயத்தால் ஏற்பட்ட உயிரிழப்புகளை சித்தரிக்கும் வகையில் சிறிய கேனில் கள்ளச்சாராயம் இருப்பது போன்றும், அதைக் குடித்து ஒருவர் உயிரிழந்திருப்பது போன்று சித்தரித்து ஒப்பாரி வைத்தும் நூதனமாக தங்கள் எதிர்வினையை பதிவு செய்தனர்.

தொடர்ந்து ஊழல் முறைகேடு, சட்டம் ஒழுங்கு சீர்கேடு உள்ளிட்டவற்றை கண்டித்து கண்டன குரல் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் அம்பாசமுத்திரம் சட்டமன்ற உறுப்பினர் இசக்கி சுப்பையா அதிமுகவின் வழக்கறிஞர் பிரிவு ஐஎஸ் இன்பத்துரை உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Views: - 130

0

0