நீட் தேர்வு எழுதிய மாணவி தோல்வி பயத்தில் தற்கொலை : தமிழகத்தில் தொடரும் சோகம்..!!

Author: Udayachandran RadhaKrishnan
14 September 2021, 9:29 am
Neet Suicide - Updatenews360
Quick Share

அரியலூர் : விக்கிரமங்கலம் அருகே நீட் தேர்வு எழுதிய மாணவி தோல்வி பயத்தால் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்த சம்பவம் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

அரியலூர் மாவட்டம் விக்கிரமங்கலம் அருகே உள்ள சாத்தம்பாடி கிராமத்தைச் சேர்ந்தவர் வழக்கறிஞர் கருணாநிதி. அவரது மனைவி ஜெயலட்சுமி. இவர்களது 2-வது மகள் கனிமொழி.

நாமக்கல் கிரீன் கார்டனில் 12 ஆம் வகுப்பு டிபத் தஅவர் 562.28 மதிப்பெண் பெற்று 93 சதவீதம் தேர்ச்சி பெற்றார். பின்னர் நீட் தேர்வை தஞ்சாவூரில் தாமரை இன்டர்நேஷனல் பப்ளிக் பள்ளியில் எழுதியுள்ளார்,

தேர்வு எழுதிய தினம் முதல் மாணவி மன உளைச்சலில் இருந்ததாக கூறப்படுகிறது. வீட்டில் பெற்றோர்களும் இந்த தேர்வு இல்லையென்றால் அடுத்த தேர்வில் பார்த்துக்கொள்ளலாம் என தைரியம் கொடுத்துள்ளனர்.

ஆனால் மனவருத்தத்தில் இருந்த கனிமொழி நேற்று இரவு துளாரங்குறிச்சி அவரது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

தமிழகத்தில் அடுத்தடுதத நாளில் இரு மாணவர்கள் நீட் தேர்வு அச்சத்தால் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. நேற்று சட்டப்பேரவையில் நீட் தேர்வுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது குறிப்பிடதக்கது.

Views: - 237

0

0