குப்பைக் கிடங்கில் திடீர் தீ விபத்து: பொதுமக்கள் அவதி…!

Author: kavin kumar
17 February 2022, 7:27 pm
Quick Share

ஈரோடு : புஞ்சை புளியம்பட்டி அருகே குப்பை கிடங்கில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தை தீயணைப்பு துறையினர் போராடி அணைத்தனர்.

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த புஞ்சைபுளியம்பட்டி நம்பியூர் செல்லும் சாலையில் உரச்சாலை என்ற பகுதியில் நகராட்சிக்கு சொந்தமான இடத்தில் செயல்படாத குப்பைக்கிடங்கு உள்ளது. இந்த குப்பை கிடங்கில் மர்ம நபர்கள் யாரோ தீயை பற்ற வைத்துள்ளனர். குப்பைகள் அதிகளவில் தேங்கி கிடந்த இடம் என்பதால் பற்றிய தீ மளமளவென எரிய தொடங்கியதால் அப்பகுதி முழுவதும் கரும்புகை சூழ்ந்தது.

இதை கண்ட அக்கம் பக்கத்தில் வசிக்கும் பொதுமக்கள் உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளித்ததை அடுத்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் பற்றி எரிந்து கொண்டிருந்த தீயின் மீது தண்ணீரை பீய்ச்சி அடித்து போராடி தீயை அணைத்தனர். தீயணைப்புத் துறையினர் விரைந்து வந்து தீயை அணைத்ததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.

Views: - 738

0

0