தமிழக ஆளுநர் ரவி திடீர் டெல்லி பயணம்: முதலமைச்சர் ஸ்டாலினுடன் விழாவில் பங்கேற்க இருந்த நிலையில் பயணம்..!!

Author: Rajesh
14 May 2022, 9:44 am
TN Governor RN Ravi -Updatenews360
Quick Share

சென்னை: தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி இன்று காலை டெல்லிக்கு திடீர் பயணம் மேற்கொள்கிறார்.

தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி சென்னையில் இருந்து இன்று காலை 10 மணிக்கு டெல்லிக்கு திடீர் பயணம் மேற்கொள்கிறார். கோவையில் பாரதியார் பல்கலைக்கழகத்தில் 37வது பட்டமளிப்பு விழா நேற்று காலையில் நடைபெற்றது. இதில், பல்கலைக்கழக இணை வேந்தரும், தமிழக உயர்கல்வித்துறை அமைச்சருமான பொன்முடி முன்னிலை வகித்தார்.

இஸ்ரோ முன்னாள் தலைவர் சிவன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார். துணைவேந்தர் காளிராஜ் வரவேற்றார். விழாவில் பல்கலைக்கழக வேந்தரும், தமிழக ஆளுநருமான ஆர்.என். ரவி கலந்து கொண்டு பட்டங்களை வழங்கினார். விழாவில் பேசிய அமைச்சர் பொன்முடி இந்தி திணிப்பு விவகாரம் பற்றி பேசினார். அமைச்சரின் பேச்சுக்கு விழா மேடையிலேயே ஆளுநர் ஆர்.என். ரவி பதில் அளித்து பேசினார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

இந்நிலையில், தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி சென்னையில் இருந்து இன்று காலை 10 மணிக்கு டெல்லிக்கு திடீர் பயணம் மேற்கொள்கிறார். வருகிற 16ம் தேதி சென்னை பல்கலைக்கழக விழாவில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுடன் ஆளுநர் ஆர்.என். ரவி பங்கேற்க உள்ள நிலையில் அவர் இன்று டெல்லிக்கு புறப்பட்டு செல்கிறார்.

Views: - 549

0

0