மருத்துவ இட ஒதுக்கீடு விவகாரத்தில் ஆளுநர் ஒப்புதல் அளிப்பார் : அண்ணாமலை நம்பிக்கை!!

18 October 2020, 9:49 am
BJP Annamalai- Updatenews360
Quick Share

புதுச்சேரி : தமிழகத்தில் மருத்துவ படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீதம் உள்ஒதுக்கீடு விவகாரத்தில் ஆளுநர் ஒப்புதல் அளிப்பார் என நம்புவதாக பாஜக துணை தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

புதுச்சேரியில் தனியார் நிகழ்ச்சியில் பங்கேற்ற தமிழக பாஜக துணை தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களிடம் பேசுகையில், மருத்து படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத ஒதுக்கீடு தேவையான ஒன்று என்றும் இதனால் கிராம்புற மாணவர்கள் பயன்பெறுவார்கள் ஆகவே இதற்கு ஆளுநர் விரைவில் ஒப்புதல் அளிப்பார் என்ற நம்பிக்கை உள்ளது என்று தெரிவித்தார்.

இதற்கும் பாஜவிற்கு எந்த சம்மந்தமும் இல்லை என தெரிவித்த அண்ணாமலை பாஜக என்றுமே இட ஒதுக்கீட்டிற்கு முக்கியத்துவம் கொடுக்கும் கட்சியாகவே உள்ளது என தெரிவித்தார்.

தமிழகத்தில் தமிழக அரசு உள்ஒதுக்கீடு கொடுக்க வேண்டும் என வலியுறுத்தியதே பாஜகவின் ஜே.பி.நட்டா தான் என்றும் அதனால் அதனை பாஜக என்றும் எதிர்க்காது என்றும் தெரிவித்தார்.

காங்கிரஸ் மூளை வளர்ச்சி இல்லாத கட்சி என்று நடிகை குஷ்பூ கூறியது யாரையும் காயப்படுத்த நோக்கில் கூறியது அல்ல என அவரே விளக்கம் அளித்துள்ள நிலையில் அதனை தேவையின்றி சிலர் பெரிதுபடுத்துவதாகவும் அண்ணாமலை தெரிவித்தார்.