பேய் விரட்டுவதாக கூறி சிறுமியை பலாத்காரம் செய்த பூசாரி : நீதிமன்றம் அளித்த பரபரப்பு தண்டனை..!!

Author: Udayachandran RadhaKrishnan
29 March 2023, 10:06 pm
Mahila - Updatenews360
Quick Share

புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் மேட்டு தெருவை சேர்ந்தவர் பழனி என்ற பழனியாண்டி சின்ன பூசாரி வயது 66. இவர் அந்த பகுதியில் மந்திரம் மாந்திரீகம் செய்து வருகிறார்

இவரிடம் அதே பகுதியைச் சேர்ந்த 15 வயது சிறுமிக்கு தொடர்ந்து வயிற்று வலி இருந்து வந்ததாக கூறப்படுகிறது 15 வயது சிறுமியின் பெற்றோர் சின்ன பூசாரியிடம் அழைத்து வந்து சிறுமியின் நிலைமை எடுத்துக் கூறியுள்ளார்.

சிறுமிக்கு என்ன நடந்தது என்று குறி பார்த்த சின்ன பூசாரி அவருக்கு பேய் பிடித்துள்ளதாகவும் பேயை தான் விரட்டுவதாகவும் கூறி சிறுமியின் பெற்றோர்களை வெளியில் அமர வைத்து விட்டு ஒரு அறையில் 15 வயது சிறுமியை அமர வைத்து பேய் விரட்டுவதாக கூறி பாலியல் வன்கொடுமை செய்த விட்டு இதை வெளியே கூறினால் உன் பெற்றோரை கொலை செய்து விடுவேன் என்று மிரட்டியும் உள்ளார்

இந்நிலையில் சிறுமி ஒரு மாதத்தில் கர்ப்ப முற்றதாக கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து பெற்றோர் அவரிடம் விசாரணை செய்தபோது தான் இந்த விஷயம் அவர்களுக்கு தெரிய வந்தது.

இதனை தொடர்ந்து சின்ன பூசாரி மீது கீரனூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் சிறுமியின் பெற்றோர் புகார் அளித்தனர் புகாரின் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து சின்ன பூசாரியை காவல்துறையினர் கைது செய்தனர்
தொடர்ந்து சிறுமியின் கர்ப்பத்தையும் கலைத்தனர்.

இந்த வழக்கு புதுக்கோட்டை மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது இன்று இந்த வழக்கை விசாரணை செய்த நீதிபதி சத்யா 15 வயது சிறுமியை தொடர்ந்து இரண்டு முறை பாலியல் வன்கொடுமை செய்து கர்ப்பம் ஆகிய குற்றச்சாட்டிற்கு அவருக்கு ஆயுள் தண்டனையும் இதை வெளியே கூறினால் பெற்றோரை கொலை செய்து விடுவேன் என்று மிரட்டல் விடுவதற்காக இரண்டு ஆண்டு கால கடுங்காவல் சிறை தண்டனையும் மூன்று லட்ச ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.

அபராத தொகை மூன்று லட்ச ரூபாயுடன் கூடுதலாக தமிழக அரசு 2 லட்ச ரூபாய் சேர்த்து ஐந்து லட்ச ரூபாய் இழப்பீடாக சிறுமிக்கு அரசு வழங்கும் உத்தரவிட்டார்.

தண்டனை பெற்ற சின்ன பூசாரி தரையில் விழுந்து புரண்டு அழுதது பரபரப்பை ஏற்படுத்தியது.

Views: - 72

0

0