வெளுத்து வாங்கப் போகும் மழை… எந்தெந்த மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை : முக்கிய அறிவிப்பு!!

Author: Udayachandran RadhaKrishnan
2 December 2023, 4:53 pm
Rain
Quick Share

வெளுத்து வாங்கப் போகும் மழை… எந்தெந்த மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை : முக்கிய அறிவிப்பு!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை சென்னை, காஞ்சிபுரம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இந்த சூழலில், சமீபத்தில் வங்க கடலில் நிலை கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்ற நிலையில், ஒருசில நாட்களில் புயலாக வலுப்பெற உள்ளது. இந்த புயலுக்கு மிக்ஜாம் (Michaung) எனவும் பெயரிடப்பட்டுள்ளது.

இதனால், தமிழகத்தில் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர் உள்ளிட்ட மாவட்டங்களும், டெல்டா மாவட்டங்களிலும் கனமழை முதல் மிக கனமழை பெய்யக்கூடும் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுப்பெற்று வரும் 5-ம் தேதி ஆந்திராவின் நெல்லூர் – மசூலிபட்டினத்திற்கு இடையே கரையை கடக்கும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால், மழை மற்றும் புயல் எச்சரிக்கையால் தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. மறுப்பக்கம் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் மிக கனமழை எச்சரிக்கை விடப்பட்டுள்ளதால், பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டும் வருகிறது. அந்தவகையில், செங்கல்பட்டு மாவட்டத்தில் வரும் 4ம் தேதி பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது.

கனமழை எச்சரிக்கை காரணமாக விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். ஏற்கனவே, கனமழை எச்சரிக்கையால் செங்கல்பட்டு மாவட்டத்தில் வரும் 4ம் தேதி திங்கள்கிழமை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது திருவள்ளூரில் அறிவிக்கப்பட்டுள்ளது. அதே போல காஞ்சிபுரம் மாவட்டத்திலும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

Views: - 301

0

0