முதலமைச்சரின் பெயரை கொச்சைப்படுத்தியதற்கு த.பெ.தி.க எதிர்ப்பு.!! தினமலர் பத்திரிகையை எரித்து போராட்டம்!!
1 August 2020, 12:38 pmகோவை : தமிழக முதலமைச்சர் பெயரை அவமரியாதையாக வெளியிட்ட தினமலர் பத்திரிக்கையை எரித்து தந்தை பெரியார் திராவிடர் கழகம் சார்பாக போராட்டம் நடைபெற்றது.
ஊரடங்கு உத்தரவு பழனி அறிவிப்பு என்று தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அவர்களின் பெயரை கொச்சைப்படுத்தி அவமரியாதையாக பழனி அறிவிப்பு என்று வெளியிட்டிருந்தது. இந்த செய்தி வெளியிட்டதற்கு தினமலர் பத்திரிக்கை உடனடியாக நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும் என தமிழகம் முழுவதும் எதிர்ப்பு கிளம்பியது.
தினமலர் பத்திரிகைகளை எரிக்கும் போராட்டம் நடைபெற்றது. இதன் ஒரு பகுதியாக கோவை காந்திபுரம் பகுதியிலுள்ள தந்தை பெரியார் திராவிடர் கழகம் அலுவலகம் முன்பு பொதுச் செயலாளர் கு.ராமகிருஷ்ணன் தலைமையில் தினமலர் பத்திரிகை எரிப்பு போராட்டம் நடைபெற்றது.
0
0