ஜெ.,வுக்கு டிடிவி செய்த மிகப்பெரிய துரோகம் : திமுக வேட்பாளர் தங்கத் தமிழ்செல்வன் TWIST!

Author: Udayachandran RadhaKrishnan
16 April 2024, 7:57 pm
thanga tamil
Quick Share

ஜெ.,வுக்கு டிடிவி செய்த மிகப்பெரிய துரோகம் : திமுக வேட்பாளர் தங்கத் தமிழ்செல்வன் TWIST!

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே தொட்டப்பநாயக்கணூர், வடுகபட்டி, பண்ணைப்பட்டி, அல்லிகுண்டம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தேனி தொகுதி திமுக வேட்பாளர் தங்கதமிழ்ச்செல்வன் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய தங்கதமிழ்ச் செல்வன், தேனியின் விமான நிலையம் கொண்டு வருவேன் என டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். என்ன நினைத்து பேசுகிறார் என புரியவில்லை.,

டிடிவி தினகரன் 14 ஆண்டுகள் அதிமுகவில் இருந்து விலக்கி வைத்தது தொடர்பாக ஓ.பன்னீர் செல்வம் காரணத்தை பொது மேடையில் பேசியிருக்கிறார்., அம்மா(ஜெயலலிதா ) உயிரோடு இருக்கும் போது அதிமுகவினரை தன் (டிடிவி தினகரன்) பக்கம் இழுத்து முதலமைச்சராக வேண்டும் என்பதற்காக முடிவெடுத்தது தொடர்பாக உளவுத்துறை கொடுத்த அறிக்கையின் காரணமாக தான் இவரை கட்சியை விட்டு நீக்கி 15 வருடம் வனவாசம் போக வைத்தார்.

எனவே டிடிவி தினகரன் நல்லதுக்கு வனவாசம் போகவில்லை தூரோகம் பன்னதால், அம்மாவிற்கு துரோகம் செய்ததால் சசிக்கலாவையும், தினகரனையும் கட்சியை விட்டு நீக்கி வைத்திருந்தார்கள் இது தான் எதார்த்தமான உண்மை என கூறினார்.

ஆர்.பி.உதயக்குமார் தங்கதமிழ்ச் செல்வன் திமுகவிற்கு சென்ற பிறகு தகர தமிழ்ச்செல்வனனாக என மாறிவிட்டார் என விமர்சனம் செய்தது குறித்த கேள்விக்கு பதில் அளித்த அவர், தங்கம் எப்போது தகரமாக மாறியது., தங்கம் தங்கமாக தான் உள்ளது.,

மேலும் படிக்க: பாஜகவில் உள்ள நடிகை குறித்து சர்ச்சை பேச்சு.. காங்கிரஸ் மூத்த தலைவருக்கு RED CARD.. 48 மணி நேரம் தடை!!

உதயசூரியனுக்கு போன பின்னர் தான் மினு மின்னுகிறது, ஜோலிக்கிற தங்கமாக இருக்கிறது., தமிழ்நாடு முதல்வர் அன்பையும் பாசத்தையும், பொறுப்பையும் கொடுத்திருக்கார்., எம்.பி ஆக நிற்க வாய்ப்பு கொடுத்து வெற்றி பெருவதற்கான சூழலையும் உருவாக்கி கொடுத்திருக்கிறார். தங்கம் ஜொலிக்கத் தான் செய்யும் என தங்க தமிழ் செல்வன் கூறினார்.

Views: - 125

0

0