திமுக ஆட்சிக்கு வந்தவுடன் நீட் தேர்வு இருக்காது: மாணவி ஜோதி ஸ்ரீ துர்கா பெற்றோருக்கு ஆறுதல் கூறிய உதயநிதி ஸ்டாலின்

12 September 2020, 9:43 pm
Quick Share

மதுரை: மாணவர்கள் தன்னம்பிக்கையோடு நாளைய தேர்வு எழுதுங்கள் 8 மாதத்தில் திமுக ஆட்சிக்கு வந்தவுடன் நீட் தேர்வு இருக்காது என ஜோதி ஸ்ரீ துர்கா பெற்றோரை சந்தித்த பின் செய்தியாளர்களை சந்தித்த திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.

மதுரையில் நீட் தேர்வு அச்சத்தில் தற்கொலை செய்துகொண்ட மாணவி ஜோதி ஸ்ரீ துர்கா பெற்றோரை அருப்புக்கோட்டை புளியம்பட்டி, காந்தி மைதானத்தில் உள்ள அவரது இல்லத்திற்கு நேரில் சென்று சந்தித்து திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் ஆறுதல் கூறி ரூ 5 லட்சம் பணத்தை வழங்கினார். அப்போது பெற்றோர் உதயநிதி ஸ்டாலினிடம் இது போன்ற நிகழ்வு இனி நடைபெற கூடாது என தெரிவித்தனர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த உதயநிதி ஸ்டாலின் பேசுகையில், தமிழக முதல்வர் மாணவர்களுக்கு மனநல மருத்துவர் ஆறுதல் கூறுவது போல் கூறுகிறார்.

நீட் தேர்விற்கு எதிரானவர்கள் என கூறும் ஆளுங்கட்சியினர் ஆட்சியை தக்க வைத்துகொள்ள அடிக்கடி டெல்லி சென்று வரும் ஆளுங்கட்சியினர் நீட்தேர்விற்கு எந்த அழுத்தமும் தரவில்லை. ஜல்லிக்கட்டுக்கு அழுத்தம் தந்ததாக கூறும் ஆளுங்கட்சியினர் நீட் தேர்வு நீக்கத்திற்கு எந்தவித முயற்சியும் எடுக்கவில்லை. பிரதமர் மோடி பிறப்பிக்கும் கட்டளையை ஏற்று ஆட்சி செய்யும் அடிமை அரசாக உள்ளது. மாணவர்கள் தன்னம்பிக்கையோடு நாளைய தேர்வு எழுதுங்கள் 8 மாதத்தில் திமுக ஆட்சிக்கு வந்தவுடன் நீட் தேர்வு இருக்காது.வருங்காலத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் உத்தரவிற்கிணங்க நீட் தேர்வுக்கு எதிரான போராட்டம் இருக்கும் என்றார்.

Views: - 0

0

0