நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் : விவசாய நிலத்தில் மஞ்சள் கிழங்கு வெட்டி திமுக வேட்பாளர் நூதன பிரச்சாரம்…
Author: kavin kumar13 பிப்ரவரி 2022, 5:37 மணி
தருமபுரி : பென்னாகரம் பேரூராட்சி 2 வது வார்டில் போட்டியிடும் திமுக வேட்பாளர் சுமதி விவசாய நிலத்தில் மஞ்சள் கிழங்கு வெட்டி நூதன பிரச்சாரம் செய்தார்.
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தருமபுரி மாவட்டத்தில் 1 நகராட்சி மற்றும் 10 பேரூராட்சிகளுக்கு தேர்தல் நடைபெருவதையொட்டி வாக்களிக்கும் நாள் நெருங்கி வருவதால் வேட்பாளர்கள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். அதனடிப்படையில் பென்னாகரம் பேரூராட்சியில் உள்ள 18 வார்டுகளில் 13 வார்டுகளில் திமுக போட்டியிடுகிறது. அதனடிப்படையில் இன்று 2 வது வார்டு ஒதுக்கபட்ட திமுக வேட்பாளர் சுமதி வெங்கடேசன் தனது வார்டுக்குட்பட்ட பகுதிகளில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
அப்போது விவசாயிகள் தங்களது நிலத்தில் மஞ்சளை கிழங்கு வெட்டி எடுத்துக் கொண்டு இருந்த போது அவர்களிடமிருந்து வேட்பாளர் சுமதி வெங்கடேசன் களை குத்து வாங்கி மஞ்சளை வெட்டி எடுத்தார். பிறகு மஞ்சளில் சேர்ந்திருந்த மண்களை அகற்றி அதை சுத்தம் செய்து கொடுத்து வாக்கு சேகரித்தார்.தற்போது தமிழகத்தில் விவசாயிகளுக்காக முதன் முறையாக தனி பட்ஜெட் அறிவித்து நிறைவேற்றியவர் தமிழக முதல்வர் என்றும், எனவே தன்னை தனக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெற செய்தால் தனது பேரூராட்சியில் விவசாயிகளின் பிரச்சனையை தீர்த்து வைப்பேன் என உறுதியளித்தார். அவருடன் திமுக மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் உடனிருந்தனர்.
0
0