கத்திக்கு அண்ணன் அரிவாளு.. பட்டாசுக்கு அக்கா நாட்டு வெடிகுண்டு : களைகட்டிய ரவுடியின் பிறந்தநாள்.. கம்பி எண்ணும் கும்பல்!!

3 July 2021, 6:16 pm
Rowdy Bday - Updatenews360
Quick Share

தூத்துக்குடி : இரண்டு கொலை வழக்குகளில் தொடர்புடைய ரவுடி தனது பிறந்தநாளை வெடிகுண்டு மற்றும் அரிவாளுடன் கேக் வெட்டி நண்பர்களுடன் பிறந்தநாள் கொண்டாடிய வீடியோ வைரலானதால் கும்பலை போலீசார் கைது செய்துள்ளனர்.

தூத்துக்குடி அருகே உள்ள ராஜூவ் நகர் பகுதியினை சேர்ந்தவர் பேத்த ரவி என்பவரது மகன் வேல்முருகன் (எ) பானா (வயது 29). இவர் மீது தூத்துக்குடி தென்பாகம் உள்ளிட்ட சில காவல் நிலையங்களில் இரண்டு கொலை வழக்குகள் உள்ளது.

இந்நிலையில் வேல்முருகன் (எ) பானா நேற்று இரவு 12-மணி அளவில் தூத்துக்குடி அருகே உள்ள முத்தையாபுரம் ஸ்பிக் அருகே வைத்து தனது பிறந்தநாளை அந்த பகுதியினை சேர்ந்த நண்பர்களுடன் சேர்ந்து நாட்டு வெடிகுண்டு மற்றும் அருவாளுடன் கேக் வெட்டி கொண்டாடி உள்ளார்.

மேலும் இந்த வீடியோவினை சமூக வளைதளங்களில் வெளியிட்டுள்ளனர். வீடியோ வைரலானதை தொடர்ந்து, இது தொடர்பாக முத்தையாபுரம் பகுதி காவல் நிலையத்தில் வழக்குபதிவு செய்யப்பட்டு வேல்முருகன்(எ)பானா மற்றும் அவரது நண்பர்கள் இந்திரன், ஆறுமுகம், கிஷோர் டேனியல், லேசர் டேவிட், மாரி செல்வம் உட்பட 10-பேரை கைது செய்தனர்.

மேலும் நடு இரவில் நாட்டு வெடிகுண்டு மற்றும் வீச்சு அரிவாள் உள்ளிட்டவைகளை வைத்து பிறந்தநாள் கொண்டாடிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Views: - 150

0

0