இந்தப் பெண்ணுக்கு ரூ.4,500 ரேட்டு… குரூப்பில் வந்த புகைப்படத்தை பார்த்து ஷாக் ; பதற்றத்தோடு காவல்நிலையம் ஓடிய இளைஞர்!!

Author: Babu Lakshmanan
3 March 2023, 6:05 pm
Quick Share

புதுச்சேரி ; இளம்பெண்களை குறிப்பிட்ட விலை பேசி பாலியல் உறவுக்கு அனுப்பி வைப்பதாக கூறி குரூப்பில் வந்த புகைப்படத்தை பார்த்து அதிர்ச்சியடைந்த இளைஞர் போலீஸில் புகார் அளித்துள்ளார்.

தொழில்நுட்பம் வளர்ச்சியடைய வளர்ச்சியடைய குற்றங்களும் நவீன காலத்திற்கு ஏற்றாற் போல உருமாறி வருகின்றன. அந்த வகையில், பாலியல் தொழில் தொடர்பான குற்றங்களும் இன்ஸ்டாகிரம், பேஸ்புக், வாட்ஸ்அப் என இதுபோன்ற ஆப்கள் மூலமாக ஜரூராகியுள்ளது.

இந்த நிலையில், புதுச்சேரியைச் சேர்ந்த 25 வயதுஇளைஞர் ஒருவருக்கு இன்ஸ்டாகிராமில் வந்த மெசேஜ்ஜை பார்த்து அதிர்ச்சியடைந்த சம்பவம் ஒன்று அரங்கேறியுள்ளது. அந்த இளைஞருக்கு அடையாளம் தெரியாத டெலிகிராம் குரூப்பில் இருந்து ஒரு புகைப்படம் வந்திருக்கிறது. அத்துடன் ‘இந்த பெண் வேண்டும் என்றால் ரூ.4,500 அனுப்பி வையுங்கள். 6 மணி நேரத்திற்கு என்ஜாய் செய்யுங்கள்’ என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது.

அந்த இளைஞர் தனக்கு வந்த போட்டோவை டவுன்லோடு செய்து பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளார். அந்தப் போட்டோவில் இருந்தது அவரது உடன் பிறந்த தங்கையாகும். இதனால், பதறிப் போன அந்த நபர், உடனடியாக இது தொடர்பாக காவல்துறையினரிடம் புகார் அளித்துள்ளார். அதன்பேரில், விசாரணையை தொடங்கிய புதுச்சேரி க்ரைம் போலீசார், மெசேஜ் எங்கிருந்து வந்தது என்று ஆய்வு செய்தனர். புதுச்சேரி காலேஜ் கேர்ள்ஸ் எனும் குரூப்பில் இருந்து இந்த மெசேஜ் வந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் , இதே போன்று 5 குரூப்கள் இயங்கி வந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.

பின்னர், குரூப் அட்மினான அரவிந்தன் என்னும் 25 வயது இளைஞரை கைது செய்து விசாரணை நடத்தினர். அதில், பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியது. அதாவது, அரவிந்தன் தனது நண்பர்களின் மூலமாக, சமூக வலைத்தளங்களிலிருந்து கிடைக்கும் இளம் பெண்களின் புகைப்படங்களை எடுத்து, ‘புதுச்சேரி காலேஜ் கேர்ள்ஸ்’ எனும் குரூப்பை உருவாக்கியிருக்கிறார். அதில், ஏராளமான இளம் பெண்களின் படங்களை பகிர்ந்த அரவிந்தன், பிறகு ஆபாச வீடியோக்களையும் பகிர்ந்துள்ளார்.

கடைசியாக ஒரு குறிப்பிட்ட இளம்பெண்ணின் படத்தை மட்டும் ஷேர் செய்து, ‘இந்த பெண் வேண்டுமெனில் ரூ.2,000 பணம் கொடுத்து புக் செய்ய வேண்டும். 6 மணி நேரத்திற்கு உங்களுடன் இருப்பார்’ என்று மெசேஜ் அனுப்பியுள்ளார். இதனையடுத்து சிலர் பணம் அனுப்பி வைத்துள்ளனர். ஆனால் பணம் வந்த அடுத்த நிமிஷமே அந்த நபர் பிளாக் செய்யப்படுவார். இதேபோல ஏராளமான நபர்களுக்கு போட்டோ ஷேர் செய்து அனுப்பி பணம் கேட்டிருக்கிறார்.

தான் இயக்கி வந்த 5 குரூப்களிலும் ஏராளமானோரிடமும் பணம் ஏமாற்றப்பட்டிருக்கிறது. இது டெலிகிராம் குரூப் என்பதால் போன் நம்பரோ, மெயில் ஐடியோ இருக்காது. அதேபோல பணம் செலுத்தும் அகவுண்டும் யாருடையது என்பதை கண்டுபிடிக்க முடியாது. பணத்தை இழந்தவர்களும் காவல் நிலையம் சென்று புகார் அளிக்க தயங்குவார்கள் என்பதால் இந்த குரூப் குறித்து பெரிய அளவில் தகவல்கள் வெளியில் வரவில்லை.

எனவே, இதுபோன்று சமூகவலைதளங்கள் மூலமாக வரும் முகம் தெரியாத நபர்களை நம்பி ஏமாற வேண்டாம் என்றும், தொழில்நுட்பத்தை இதுபோன்று தவறாக பயன்படுத்துபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Views: - 633

0

0