உடலில் மதுபாட்டில்கள் மறைத்து கடத்திய இளைஞர்கள் கைது

4 July 2021, 8:04 pm
Quick Share

திருவாரூர்: திருத்துறைப்பூண்டி அருகே உடலில் மதுபாட்டில்கள் மறைத்து கடத்திய இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர்.

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி கொரோனா பெருந்தொற்று பரவாமல் தடுக்க தமிழக அரசு முழு ஊரடங்கு அறிவித்தது. இதனால் டாஸ்மாக் மதுபான கடைகள் அடைக்கப்பட்டது இதனால் திருவாரூர் மாவட்டத்தில் மது கிடைக்கவில்லை. ஆனால் திருவாரூர் நாகை மாவட்டத்திங்களுக்கு அருகில் உள்ள காரை காலில் மதுபான கடைகள் திறக்கப்பட்டன. பாண்டிச்சேரி மாநிலமான காரை காலில் மதுபாட்டில்கள் விலை குறைவு அங்கிருந்து மதுபாட்டில்கள் கடத்திவரப்ப்பட்டு திருத்துறைப்பூண்டி பகுதிகளில் கள்ள சந்தையில் விற்கபடுவதாக வந்த தகவலின் பேரில், மதுவிலக்கு போலீசார் பல பகுதிகளில் சோதனையில் ஈடுப்பட்டனர்.

அப்போது திருத்துறைப்பூண்டி அருகே கச்சனம் என்ற இடத்தில் வாகன சோதனையில் ஈடுபட்ட போது இரு இளைஞர்கள் சந்தேகத்திற்கிடமாக இருசக்கர வாகனத்தில் வந்துள்ளனர். அவர்களை மறித்து சோதனையிட்ட போது நூதன முறையில், அவர்கள் உடலில் பார்சலில் ஓட்டப்படும் டேப் மூலம் உடலில் 48 மதுபாட்டில்களை கடத்தி வந்தது தெரியவந்தது. அந்த இரண்டு இளைஞர்கள் திருத்துறைப்பூண்டி அருகே உள்ள களப்பால் பகுதியை சேர்ந்த ரமேஷ், மனோகர் என தெரியவந்தது. அவர்களிடமிருந்த மது பாட்டில்களை பறிமுதல் செய்து இருவர் மீதும் வழக்கு பதிவு செய்து மதுவிலக்கு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் திருத்துறைப்பூண்டி பகுதியில் கள்ளச்சந்தையில் மது பாட்டில்கள் விற்கப்படுகின்றனவா என தீவீர சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

Views: - 191

0

0