ப்ளூடூத் ஹெட்போன் வெடித்ததால் 28 வயது இளைஞர் மாரடைப்பால் மரணம் | இதென்னய்யா கொடுமையா இருக்கு?

Author: Hemalatha Ramkumar
10 August 2021, 3:51 pm
28-Year-Old Dies Of Heart Attack After His Bluetooth Headphone Exploded
Quick Share

ராஜஸ்தானில் 28 வயதான ஒரு இளைஞர் புளூடூத் ஹெட்செட் வெடித்ததால் இறந்த சம்பவம் எல்கட்ரானிக் கேட்ஜெட்டுகளைப் பயன்படுத்துவோர் மத்தியில் பீதியை ஏற்படுத்தியுள்ளது. ஹெட்செட் வெடித்ததால் அந்த இளைஞருக்கு மாரடைப்பு ஏற்பட்டதன் காரணமாக அவர் இறந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

PTI தளத்தில் முதலில் வெளியான செய்தியின்படி, இந்தச் சம்பவம் ஜெய்ப்பூரில் உள்ள சோமு (Chomu) பகுதியில் உள்ள உதய்புரியா கிராமத்தில் நடந்துள்ளது. இந்த சம்பவத்தில் இறந்தவரின் பெயர் ராகேஷ் நாகர் என்பது கண்டறியப்பட்டுள்ளது.

இறந்த இளைஞர் ராகேஷ் நாகர், ஒரு போட்டித் தேர்வுக்குத் தயாராக படித்துக் கொண்டிருந்தார் என்றும், ஹெட்செட்டை சார்ஜ் செய்து கொண்டே கல்வி சம்பந்தமான தகவலைக் கேட்டுக்கொண்டிருக்கும் போது திடீரென ஹெட்செட் வெடித்ததால் நாகர் சுயநினைவை இழந்து தரையில் மயங்கி விழுந்ததாகவும் கூறப்படுகிறது.

விரைவில், அவர் அருகில் உள்ள சித்திவிநாயக் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு, அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். மருத்துவரின் அறிக்கையின்படி, அவரது இரண்டு காதுகளும் ஹெட்செட் வெடித்ததால் காயமடைந்துள்ளன. அங்கிருந்த டாக்டர் எல்என் ருண்ட்லா அவர்களின் தகவலின்படி, புளூடூத் ஹெட்செட் வெடித்து மாரடைப்பால் இறந்த முதல் சம்பவம் இதுதான்.

இந்த சம்பவம் குறித்து வேறு தகவல்கள் ஏதும் பகிரப்படவில்லை. மேலும் ராகேஷ் எந்த வகையான பிராண்ட் ஹெட்செட்டைப் பயன்படுத்துகினார் மற்றும் ஹெட்செட் எந்த நிலையில் இருந்தது, வெடித்துச் சிதற என்ன காரணமாக இருந்திருக்கும் என்பன போன்ற க்ளெவிகளுக்கெல்லாம் பதிலேதும் இல்லை.

இந்த சம்பவத்திற்கு ஹெட்செட்டில் உற்பத்தி குறைபாடு இருந்திருக்கலாம், ஏதேனும் சேதம் ஏற்பட்டிருக்கலாம் அல்லது பேட்டரி அல்லது சார்ஜிங் செய்யும்போது பயன்படுத்தியதால் வெடித்திருக்கலாம் என பல காரணங்கள் சொல்லப்படுகிறது. 

புளூடூத் ஹெட்செட்களை வாங்கும் போது, ​​குறிப்பாக உண்மையிலேயே வயர்லெஸ் வகையிலான ஹெட்செட் வாங்கும் போது, நல்ல பிரபலமான பிராண்டுகளை வாங்குவதே சிறந்தது. குறைந்த விலையில் கிடைக்கிறதே என்று ஏதோ ஒரு பிராண்டை வாங்கி, ஏதேனும் சேதத்திற்கு ஆளாகக்கூடாது என்று பரிந்துரைக்கப்படுகிறது. 

மேலும், சாதனத்தை சார்ஜ் செய்யும் போது நீங்கள் சாதனத்தைப் பயன்படுத்த வேண்டாம் என்று அழுத்தமாக பரிந்துரைக்கப்படுகிறது, ஏனெனில் இதனால் சாதனங்கள் அளவை விட அதிகமாக வெப்பமாகும் என்பதாலும் வெடித்துச் சிதற வாய்ப்புண்டு என்பதை நினைவில் கொள்ளுங்கள். 

Views: - 389

0

0