கைகளைக் காயப்படுத்தும் ஆப்பிள் ஐபோன் 12! வாங்கியவர்கள் புலம்பல்

31 October 2020, 8:03 pm
Apple iPhone 12 edges are very sharp and it can hurt your fingers, claim users
Quick Share

அமெரிக்கா, சீனா மற்றும் பிற நாடுகளில் ஆப்பிள் தனது ஐபோன் 12 போனை விற்பனைக்கு வெளியிட்ட ஒரு வாரத்திற்குப் பிறகு, சில பயனர்கள் தொலைபேசியின் விளிம்புகள் மிகவும் கூர்மையானவை, அது உங்கள் விரல்களை காயப்படுத்தும் என்று கூறியுள்ளனர்.

எல்லோருக்கும் முன்னால் முதன்முதலில் தொலைபேசியை வாங்கிய சில சீன பயனர்கள், ஐபோன் 12 தொலைபேசியின் கூர்மையான விளிம்புகளால் காயமடைந்த விரல்கள் மற்றும் உள்ளங்கைகளின் படங்களை சமூக ஊடகங்களில் வெளியிட்டு புலம்பி வருகின்றனர்.

ஒரு பயனர் தனது விரலின் கீழ் சிவந்து போயிருக்கும் படத்தைப் பகிர்ந்துள்ளதாகவும், மற்றொரு பயனர் தனது உள்ளங்கை சிவப்பு போன படத்தையும், ஆழமான அழுத்த அடையாளங்களுடன் பகிர்ந்துள்ளதாகவும் ஜிஸ்சைனா அறிக்கை வெளியிட்டுள்ளது.

Apple iPhone 12 edges are very sharp and it can hurt your fingers, claim users

ஐபோன் 12 மற்றும் 12 மினியின் விளிம்புகள் அலுமினியத்தால் தயாரிக்கப்பட்டுள்ளது, ஐபோன் 12 ப்ரோ மற்றும் புரோ மேக்ஸின் விளிம்புகள் துருப்பிடிக்காத ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் மூலம் தயாரிக்கப்படுகின்றன.

ஆப்பிள் ஐபோன் 12 மற்றும் ஐபோன் 12 ப்ரோ அக்டோபர் 31 ஆம் தேதி இந்தியாவில் விற்பனைக்கு வரும். ஐபோன் 12 விலை 64 ஜிபிக்கு ரூ.79,900, 128 ஜிபிக்கு ரூ.84,900 மற்றும் 256 ஜிபி க்கு ரூ.94,900 விலையுடன் விற்பனைக்கு வரும்.

ஐபோன் 12 ப்ரோ விலை 128 ஜிபிக்கு ரூ.1,19,900 முதல் தொடங்குகிறது. 256 ஜிபி வேரியண்டின் விலை ரூ.1,29,900 ஆகவும், 512 ஜிபி வேரியண்டிற்கு ரூ.1,49,900 விலையும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இரண்டு தொலைபேசிகளும் அனைத்து ஆப்பிள் சில்லறை கடைகளிலும், ஆப்பிள் ஆன்லைன் ஸ்டோரிலும் கிடைக்கும்

Views: - 32

0

0

1 thought on “கைகளைக் காயப்படுத்தும் ஆப்பிள் ஐபோன் 12! வாங்கியவர்கள் புலம்பல்

Comments are closed.