செம்ம அசத்தலான ஐபாட் ஏர் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய 10 விஷயங்கள்

16 September 2020, 12:01 pm
Apple launches its most powerful iPad yet: 11 things to know
Quick Share

ஐபாட்கள் எப்போதுமே ஆப்பிள் நிறுவன தயாரிப்புகளில் தனக்கென ஒரு தனி இடத்தைப் பிடித்து வைத்துள்ளது. கடந்த சில ஆண்டுகளாக, நிறுவனம் இந்த ஐபாட் வரிசையை செம்ம அசத்தலாக புதுப்பித்து வருகிறது. 

இப்போது குபேர்டினோவை தளமாகக் கொண்ட தொழில்நுட்ப நிறுவனம் அதன் டைம் ஃப்ளைஸ் நிகழ்வில் புதிய ஐபாட் ஏர்  சாதனத்தையும் அறிமுகப்படுத்தி உள்ளது. புதிய ஐபாட் ஏர் A14 பயோனிக் சிப்பால் இயக்கப்படுகிறது, இது ஆப்பிள் தயாரித்த மிக சக்திவாய்ந்த ஐபாட் ஆகும். இந்தப் புதிய ஐபாட் ஏர் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய 11 விஷயங்கள் இங்கே:

  1. புதிய ஐபாட் ஏர் 64 ஜிபி மற்றும் 128 ஜிபி என இரண்டு சேமிப்பக கட்டமைப்புகளில் வரும்.
  2. ஐபாட் ஏர் சாதனத்தின் வைஃபை ஒன்லி மாடலின் ஆரம்ப விலை ரூ.54,900 ஆகவும், வைஃபை+ செல்லுலார் மாடலின் விலை ரூ.66,900 ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
  3. ஐபாட் ஏர் சில்வர், ஸ்பேஸ் கிரே, ரோஸ் கோல்டு, பச்சை மற்றும் ஸ்கை ப்ளூ ஆகிய ஐந்து வண்ண வகைகளில் கிடைக்கும் – இது ஆப்பிள் தயாரித்த மிகவும் வண்ணமயமான ஐபாட் ஆகும்.
  4. புதிய ஐபாட் ஏர் 10.9 இன்ச் லிக்விட் ரெடினா டிஸ்ப்ளேவைக் கொண்டுள்ளது, இது anti-reflective coating உடன் வருகிறது
  5. A14 பயோனிக் சிப் ஐபாட் ஏர் சாதனத்துக்கு ஆற்றல் அளிக்கிறது மற்றும் ஆப்பிள் தயாரித்ததிலேயே மிகவும் சக்திவாய்ந்த ஐபாட் ஆகும்
  6. ஐபாட் ஏரில் உள்ள A14 சிப் CPU செயல்திறனில் 40% பூஸ்ட் 30% கிராபிக்ஸ் முன்னேற்றத்தையும் உறுதிப்படுத்துகிறது.
  7. A14 பயோனிக் சிப் ஒரு புதிய 16-கோர் நியூரல் இன்ஜினை கொண்டுள்ளதாக ஆப்பிள் கூறுகிறது, இது இரு மடங்கு வேகமானது, மேலும் வினாடிக்கு 11  டிரில்லியன் ஆபரேஷன்ஸ் வரை செயல்படும் திறன் கொண்டது
  8. அக்டோபர் முதல் ஐபாட் ஏர் வாங்குவதற்கு கிடைக்கும் என்று ஆப்பிள் தெரிவித்துள்ளது.
  9. ஐபாட் ஏர் இப்போது 5 Gbps வரை தரவு பரிமாற்றத்திற்கான யூ.எஸ்.பி-C போர்ட்டைக் கொண்டுள்ளது, இது 10 மடங்கு வேகமானது, 2 கேமராக்கள், ஹார்ட் டிரைவ்கள் மற்றும் 4K வரை வெளிப்புற மானிட்டர்களை இணைக்க   ஏதுவானது.
  10. ஐபாட் ஏர் 7MP முன்பக்க ஃபேஸ்டைம் HD கேமரா மற்றும் ஐபாட் புரோவில் பயன்படுத்தப்படும் அதே 12MP பின்புற கேமராவை கொண்டுள்ளது. ஐபாட் ஏர் மேஜிக் கீபோர்டு, ஸ்மார்ட் கீபோர்டு ஃபோலியோ மற்றும் ஆப்பிள் பென்சிலுடன் இணக்கமானது.

Views: - 1

0

0