மே 21 அன்று புதிய ஆப்பிள் டிவி 4K, ஐபாட் புரோ மாடல்கள் விற்பனை?!

3 May 2021, 5:36 pm
Apple TV 4K, iPad Pro models might go on sale on May 21
Quick Share

வெற்றிகரமாக நடந்து முடிந்த “ஸ்பிரிங் லோடட்” நிகழ்வில் புதிய வண்ணங்களிலான ஐபோன், ஐமேக், உட்பட பல சாதனங்களை அறிமுகம் செய்ததை அடுத்து, இப்போது ஆப்பிள் நிறுவனம் M1 சிப் உடன் புதிய ஐபேட் புரோ மற்றும் புதுப்பிக்கப்பட்ட சிரி ரிமோட்டுடன்  மேம்படுத்தப்பட்ட ஆப்பிள் டிவி 4K சாதனங்களை அறிமுகம் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த சாதனங்களின் விற்பனை மே 21 முதல் துவங்கவுள்ளது. பிரபலமான தகவல் கசிவாளர் ஆன ஜான் ப்ராஸ்ஸர் ஒரு ட்வீட் மூலம் இந்த தகவலைப் பகிர்ந்துள்ளார். 

இங்கிலாந்து சில்லறை விற்பனையாளரான John Lewis புதிய ஐமேக் மற்றும் ஐபாட் புரோவுக்கான கிடைக்கும் தன்மை குறித்து வெளிப்படுத்தியதை அடுத்து,  இந்த சாதனங்களுக்கான வெளியீட்டு தேதி மே 21 அன்று என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. 

முன்னதாக, மே 22 அன்று ஒரு நாள் கழித்து 11 அங்குல மாடல் வெளியாகும் என்று பிராஸ்ஸர் கூறியிருந்தார், ஆனால் இப்போது இரு மாடல்களும் ஒரே தேதியில் அறிமுகம் செய்யப்படும் என்று தெரிவித்துள்ளார். சமீபத்தில், ஆப்பிள் தனது மிக சக்திவாய்ந்த மற்றும் மேம்பட்ட ஐபாட் புரோவை அறிமுகம் செய்தது, இதில் M1 சிப், அல்ட்ரா-ஃபாஸ்ட் 5ஜி மற்றும் 12.9 இன்ச் லிக்குயிட் ரெடினா XDR டிஸ்ப்ளே ஆகியவை இடம்பெறும்.

புதிய 11 அங்குல மற்றும் 12.9 அங்குல ஐபாட் புரோ சில்வர் மற்றும் ஸ்பேஸ் கிரே நிறங்களில் கிடைக்கும். ஐபாட் புரோ 128 ஜிபி, 256 ஜிபி, 512 ஜிபி, 1 TB மற்றும் 2 TB உள்ளமைவுகளில் கிடைக்கிறது.

நிறுவனம் ஒரு புதிய ஐமேக் ஒன்றையும் வெளியிட்டது, இது 24 அங்குல 4.5K ரெடினா டிஸ்ப்ளே 11.3 மில்லியன் பிக்சல்கள், 500 நைட்ஸ் பிரகாசம் மற்றும் ஒரு பில்லியனுக்கும் அதிகமான வண்ணங்களைக் கொண்டுள்ளது, இது ஒரு அற்புதமான மற்றும் தெளிவான பார்வை அனுபவத்தை வழங்குகிறது.

Views: - 84

0

0

Leave a Reply