ரூ.1.14 லட்சம் மதிப்பில் ஏப்ரிலியா SXR 125 மேக்ஸி-ஸ்கூட்டர் அறிமுகம் | அம்சங்கள் மற்றும் விவரங்கள் இங்கே

15 May 2021, 1:51 pm
Aprilia SXR 125 Maxi-Scooter Launched in India
Quick Share

பியாஜியோ இந்தியா இறுதியாக நாட்டில் ஏப்ரிலியா SXR 125 மேக்ஸி-ஸ்கூட்டரை அறிமுகம் செய்துள்ளது. இந்த புதிய SXR 125 ஸ்கூட்டரின் விலை ரூ.1,14,994 (எக்ஸ்-ஷோரூம், புனே) ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த ஸ்கூட்டரை வாங்க விருப்பம் உள்ளவர்கள் ரூ.5 ஆயிரம் முன்பணத்தைச் செலுத்துவதன் மூலம் முன்பதிவுச் செய்து கொள்ளலாம். ஆர்வமுள்ள வாடிக்கையாளர்கள் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ வலைத்தளம் மற்றும் அனைத்து டீலர்ஷிப்களிலும் ஸ்கூட்டரை ஆன்லைனில் வாங்கலாம்.

புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட ஏப்ரிலியா SXR 160 நாட்டில் சுசுகி பர்க்மேன் 125 ஸ்கூட்டருக்குப் போட்டியாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஸ்கூட்டர் அதன் வடிவமைப்பு கூறுகளை ஏப்ரிலியா SXR 160 போன்றே கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த ஸ்கூட்டர் மேட் பிளாக், பளபளப்பான வெள்ளை, மேட் ப்ளூ மற்றும் பளபளப்பான சிவப்பு மூன்று வண்ண விருப்பங்களில் வருகிறது.

ஸ்கூட்டரின் தோற்றத்தைப் பொறுத்தவரையில் சிறப்பான கிராபிக்ஸ், டார்க் குரோம் கூறுகள், ஹனிகோம்ப் கிரில், குரோம் உடன் அலங்கரிக்கப்பட்ட எக்ஸ்ஹாஸ்ட், முன் பம்பர்கள், எல்இடி ஹெட்லைட்கள், எல்இடி டெயில்லைட்ஸ், 12 அங்குல சிவப்பு நிற அலாய் வீல்கள் மற்றும் பல அம்சங்களுடன் சிறப்பாக உள்ளது.

சஸ்பென்ஷன் அமைப்பைப் பொறுத்தவரை, முன்பக்கத்தில் இரட்டை டெலெஸ்கோபிக் செட்அப் உடனும் பின்பக்கத்தில் பின்புறத்தில் சரிசெய்யக்கூடிய சஸ்பென்ஷன் அமைப்பின் மூலமும் கையாளப்படுகிறது. 

இது 5.7 அங்குல டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் பேனலைக் கொண்டுள்ளது, இது டேகோமீட்டர், மைலேஜ், டாப் ஸ்பீடு, எரிபொருள் காட்டி, ஓடோமீட்டர் மற்றும் பலவற்றையும் கொண்டுள்ளது.

இன்ஜின் அமைப்பைப் பொறுத்தவரை, ஏப்ரிலியா SXR 125 BS6-இணக்கமான 125 சிசி, ஏர்-கூல்டு  இன்ஜினைப் பயன்படுத்துகிறது. இது 9.52 bhp அதிகபட்ச சக்தியையும், 9.2 Nm உச்ச திருப்புவிசையையும் உருவாக்குகிறது.

Views: - 204

0

0