புது விதமான வடிவமைப்பில் ASUS Chromebook Detachable CM3 டேப்லெட் அறிமுகம் | விலை & விவரங்கள் இங்கே

4 June 2021, 8:35 am
ASUS Chromebook Detachable CM3 tablet launched at around Rs. 25,600
Quick Share

ஆசஸ் நிறுவனம் தனது சமீபத்திய Chromebook Detachable CM3 டேப்லெட் சாதனத்தை அறிமுகம் செய்துள்ளது. இதன் ஆரம்ப விலை $350 (தோராயமாக ரூ.25,600) ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

முக்கிய சிறப்பம்சங்களைப் பொறுத்தவரை, இது LCD தொடுதிரை, 8 MP பின்புற கேமரா, மீடியா டெக் செயலி மற்றும் 28Wh பேட்டரி ஆகியவற்றைக் கொண்டுள்ளது.

இந்த டேப்லெட் USI பென் (ஸ்டைலஸ்) மற்றும் ErgoLift வடிவமைப்புடன் தனியே பிரித்தெடுக்கக்கூடிய கீபோர்டு ஆகியவற்றிற்கான ஆதரவையும் வழங்குகிறது.

ஆசஸ் Chromebook Detachable CM3 டேப்லெட் தடிமனான பெசல் கொண்ட ஒரு மேட்-ஃபினிஷ் அலுமினிய உடலமைப்பு, ஒரு MIL-STD 810H உருவாக்க தரம் மற்றும் ஒரு கறை-எதிர்ப்பு கவர் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. இது 8MP பின்புற கேமரா மற்றும் 2MP முன் ஸ்னாப்பரைக் கொண்டுள்ளது.

டேப்லெட் 10.5 இன்ச் ஃபுல்-HD+ (1920 x 1200) LED-பேக்லிட் LCD திரையை 16:10 என்ற விகிதத்துடன் மற்றும் 320-நைட்ஸ் பிரகாசத்துடன் கொண்டுள்ளது.

இது 0.51 கிலோ எடையையும் மற்றும் 25.54×16.72×0.79cm அளவுகளைக் கொண்டுள்ளது.

ஆசஸ் Chromebook Detachable CM3 ஒரு யூ.எஸ்.பி 2.0 டைப்-C போர்ட், ஒரு உள்ளமைக்கப்பட்ட ஸ்பீக்கர், மைக்ரோஃபோன் மற்றும் ஒரு ஹெட்போன்ஜே ஜேக் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. வயர்லெஸ் இணைப்பிற்கு, இது டூயல்-பேன்ட் வைஃபை மற்றும் புளூடூத் 4.2 க்கான ஆதரவை வழங்குகிறது.

ஆசஸ் குரோம் புக் Detachable CM3 மீடியா டெக் MT8183 செயலியில் இருந்து ஆற்றல் பெறுகிறது, இதில் ARM மாலி-G72 MP3 GPU 4 ஜிபி LPDDR4 RAM மற்றும் 128 ஜிபி வரை ஸ்டோரேஜ் உள்ளது.

உட்புறத்தில், இது Chrome OS இல் இயங்குகிறது மற்றும் 27Wh பேட்டரியை பேக் செய்கிறது, இது ஒரே சார்ஜிங் உடன் 12 மணி நேரம் வரை இயங்கும் என்று கூறப்படுகிறது.

டேப்லெட் கூகிள் வாய்ஸ் அசிஸ்டன்ட் ஆதரவையும் கொண்டுள்ளது.

ஆசஸ் குரோம் புக் Detachable CM3 விலை 64 ஜிபி சேமிப்பக மாடலுக்கு $350 (தோராயமாக ரூ.25,600) விலையும் மற்றும் 128 ஜிபி பதிப்பிற்கு $370 (சுமார் ரூ.27,000) விலையும், USI Pen க்கு $39 (சுமார் ரூ. 2,900) விலையும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

Views: - 170

0

0

Leave a Reply