பஜாஜ் ஆட்டோ இந்திய சந்தையில் எக்செல்சியர்-ஹென்டர்சன் மோட்டார்சைக்கிள்களை அறிமுகப்படுத்துகிறதா? தெரிந்துக்கொள்ளுங்கள்

29 December 2020, 6:16 pm
Bajaj Auto To Introduce Excelsior-Henderson Motorcycles In The Indian Market
Quick Share

பஜாஜ் ஆட்டோ இந்திய சந்தையில் பாரம்பரிய பிராண்டான எக்செல்சியர்-ஹென்டர்சனுக்கான அறிவுசார் சொத்துரிமைக்காக மனு தாக்கல் செய்துள்ளது. வாகனங்கள், மோட்டார் கார்கள் மற்றும் மோட்டார் சைக்கிள்களுக்குப் பயன்படுத்த இந்தியாவில் தாக்கல் செய்யப்பட்ட காப்புரிமை Nice Classification 12 இன் கீழ் வகைப்படுத்தப்பட்டுள்ளது. இதைச் செய்வதன் மூலம், இந்திய சந்தையில் அமெரிக்க க்ரூஸர் மோட்டார் சைக்கிள் பிராண்டை புதுப்பிக்க பஜாஜ் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Bajaj Auto To Introduce Excelsior-Henderson Motorcycles In The Indian Market

எக்செல்சியர்-ஹென்டர்சன் – ஒரு சிறிய வரலாறு: 

Bajaj Auto To Introduce Excelsior-Henderson Motorcycles In The Indian Market

1870 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டதிலிருந்து நிறுவனம் சைக்கிள் மற்றும் சைக்கிள் பாகங்களை உருவாக்கியது, அடுத்த 30 ஆண்டுகளும் நிறுவனம் அதையே செய்தது. 1905 ஆம் ஆண்டில், ஹெரிடேஜ் பிராண்ட் எக்செல்சியர் பிராண்டின் கீழ் மோட்டார் சைக்கிள் வணிகத்தில் இறங்கியது.

1920 களில், நிறுவனம் இரண்டு மோட்டார் சைக்கிள்களை உற்பத்தி செய்தது, ஒரு V-ட்வின் எக்செல்சியர் மற்றும் 4 சிலிண்டர் ஹென்டர்சன். ஆனால் துரதிர்ஷ்டவசமாக எக்ஸெல்சியர்-ஹென்டர்சன் 1931 ஆண்டில்  மூடப்பட்டது. நீண்ட காத்திருப்புக்குப் பிறகு, 90 களில் இந்த பிராண்ட் மீண்டும் ஹன்லோன் (Hanlon) உற்பத்தி நிறுவனத்தால் புதுப்பிக்கப்பட்டது.

Bajaj Auto To Introduce Excelsior-Henderson Motorcycles In The Indian Market


அப்போது நிறுவனம் அமெரிக்க பயண மோட்டார் சைக்கிள்களை வடிவமைத்து தயாரிக்க விரும்பியது. நிறுவனத்தின் முதல் மாடலாக சூப்பர் X 1998 ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்டது. சூப்பர் X அடுத்த ஆண்டு முதலே உற்பத்தியையும் துவங்கியது.  

Bajaj Auto To Introduce Excelsior-Henderson Motorcycles In The Indian Market

இதையடுத்து, இப்போது பஜாஜ் நிறுவனம் இந்த  பிராண்டை புதுப்பிப்பதற்காக காப்புரிமையை தாக்கல் செய்துள்ளது.  

பஜாஜ் நிறுவனம் ஒரு புதிய உற்பத்தி ஆலையை மகாராஷ்டிரா மாநிலத்தில் அமைப்பதற்காக மகாராஷ்டிரா அரசாங்கத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. இருசக்கர வாகன பிராண்டிலிருந்து ரூ.650 கோடி முதலீட்டுடன் புதிய உற்பத்தி வசதி சக்கனில் அமைக்கப்படும்.

Mahindra Scorpio Name Registered In India

புதிய உற்பத்தி ஆலை 2023 முதல் வாகன உற்பத்தியைத் தொடங்கும் என்று கூறப்படுகிறது. இது கேடிஎம், ஹஸ்குவர்ணா மற்றும் ட்ரையம்ப் ஆகியவற்றிற்கான உயர் மட்ட மோட்டார் சைக்கிள்களை உற்பத்தி செய்யும். புதிய ஆலை மின்சார வாகனங்களின் உற்பத்திக்கும் மேலும் பயன்படுத்தப்படும், இது இப்போதைக்கு சேடக் மாடலை மட்டுமே கொண்டுள்ளது.

Views: - 1

0

0