அடடா இது சூப்பரா இருக்கே! 32 மணி நேர பேட்டரி லைஃப் கொண்ட போல்ட் ஆடியோ ஃப்ரீபாட்ஸ் விலை இவ்ளோதானா?

20 July 2021, 9:50 am
Boult Audio Freepods Pro TWS earbuds with 32-Hour Battery Life launched
Quick Share

இந்திய ஆடியோ தயாரிப்புகள் நிறுவனமான போல்ட் ஆடியோ தங்களது சமீபத்திய வயர்லெஸ் இயர்பட்ஸ் ஆன ஃப்ரீபாட்ஸ் புரோ என்பதை அறிமுகம் செய்துள்ளது. இது புளூடூத் 5.0, IPX 5 நீர் எதிர்ப்பு, இரட்டை மைக்ரோஃபோன்கள், நீண்ட பேட்டரி லைஃப் மற்றும் பல அம்சங்களைக் கொண்டுள்ளது.

ஃப்ரீபாட்ஸ் புரோ IPX 5 சான்றிதழுடன் ஒரு சிறிய, வசதியான இலகுரக வடிவமைப்பைக் கொண்டுள்ளது, மேலும் இது உயர் மற்றும் நடுத்தர அதிர்வெண்களில் சமரசம் செய்யாமல் கூடுதல் பாஸ் வழங்க இன்-பில்ட் மைக்ரோ சப்-வூஃபர் கொண்டுள்ளது. அழைப்புகளுக்காக, இந்த இயர்பாட்ஸ் இன்-பில்ட் இரைச்சல் கட்டுப்பாடு வசதியுடன் இரட்டை மைக்ரோஃபோன்களைக் கொண்டுள்ளது.

அவை இசை இயக்கத்திற்கென மற்றும் அழைப்புகளுக்கு பதிலளிக்க / நிராகரிக்க என தொடுதல் கட்டுப்பாடுகள் உடன் வருகின்றன. ஒரு முறை சார்ஜ் செய்தால் இயர்பட்ஸ் 8 மணிநேர தொடர்ச்சியான இயக்க நேரத்தை வழங்கும், மேலும் சார்ஜிங் கேஸ் பேட்டரி ஆயுளை மொத்தம் 32 மணி நேரம் நீட்டிக்கும். இது யூ.எஸ்.பி டைப்-C வழியாக வேகமாக சார்ஜிங் தொழில்நுட்பத்தையும் கொண்டுள்ளது, இதன் மூலம் 10 நிமிடங்கள் சார்ஜ் செய்தால் 100 நிமிடங்கள் கேட்கும் நேரத்தைப் பெற முடியும்.

போல்ட் ஆடியோ ஃப்ரீபாட்ஸ் புரோ TWS இயர்பட்ஸ் கருப்பு, வெள்ளை மற்றும் நீலம் ஆகிய மூன்று வண்ணங்களில் வரும், இவை பிளிப்கார்ட்டில் ரூ.1,299 விலையில் வாங்க கிடைக்கிறது.

Views: - 100

0

0

Leave a Reply