உங்ககிட்ட பிஎஸ்என்எல் சிம் இருக்கா? 1000 SMS ஃப்ரீயா அனுப்பலாம் தெரியுமா?

Author: Hemalatha Ramkumar
24 August 2021, 3:20 pm
BSNL Offering 1000 Free Messages With Revised Bulk Push SMS Services
Quick Share

பிஎஸ்என்எல் பல்க் புஷ் எஸ்எம்எஸ் சேவைகளில் சில மாற்றங்களைச் செய்து அறிமுகம் செய்துள்ளது. இந்த திருத்தப்பட்ட எஸ்எம்எஸ் பேக் இப்போது அனைத்து 20 வட்டங்களிலும் கிடைக்கிறது. இந்த திருத்தத்தின் கீழ், பிஎஸ்என்எல் விதிமுறைகளை மீறியதற்காக பாதுகாப்பு வைப்புத்தொகையை வசூலிப்பதை நிறுத்தி உள்ளது.

BSNL வழங்கும் இந்த  Bulk Push SMS  சேவைகளைச் செயல்படுத்த, பிஎஸ்என்எல் வாடிக்கையாளர்கள் BSNL DLT போர்ட்டலில் தங்கள் எண்ணைப் பதிவு செய்து கொள்ள வேண்டும். இருப்பினும், இந்த சேவையைப் பெற ஒரு முறை கட்டணமாக ரூ.5,000 செலுத்த வேண்டும்.

பதிவுசெய்த பிறகு, பயனர்கள் வரவேற்பு சலுகையின் கீழ் 1000 இலவச செய்திகளை அணுக முடியும். தவிர, பயனர்கள் பிஎஸ்என்எல் வெப் போர்ட்டலுக்கான அணுகலையும் பெறுவார்கள், இதன் மூலம் அவர்கள் மொத்தமாக புஷ் எஸ்எம்எஸ் அனுப்ப முடியும். இந்த சேவைகள் பரிவர்த்தனை மற்றும் விளம்பரம் போன்ற அனைத்து செய்திகளுக்கும் பயன்படுத்த ஏற்றது.

திருத்தப்பட்ட BSNL Bulk SMS திட்டங்களின் விலை விரங்கள்

நிறுவனம் இந்த பிரிவின் கீழ் 10 திட்டங்களை வழங்குகிறது, இதன் விலை ரூ.1,000, ரூ. 2,000, ரூ. 5,000, ரூ. 10,000, ரூ. 20,000, ரூ. 50,000, ரூ. 1,00,000, ரூ. 10,00,000, ரூ. 25,00,000, மற்றும் ரூ. 40,00,000 ஆகும். இந்த திட்டங்கள் 30, 60, 180 மற்றும் 365 நாட்கள் வரையிலான வேலிடிட்டியைக் கொண்டுள்ளன.

இந்தத் திட்டங்களின் பலன்களைப் பொறுத்தவரை, நிறுவனம் இன்ஸ்டன்ட் மெசேஜிங், பரிவர்த்தனை, விளம்பரப்படுத்தல், பல கணக்குகளை நிர்வகித்தல், எஸ்எம்எஸ் வரவுகளை மாற்றுவது, நெகிழ்வான எஸ்எம்எஸ் அட்டவணை, unicode ஆதரவு, தானியங்கி அட்டவணை மற்றும் பரிவர்த்தனை வரலாற்றைப் பார்த்தல் போன்ற வசதிகளை வழங்குகிறது.

Views: - 288

0

0