குடியரசு தினத்தை முன்னிட்டு செம ஆஃபரை அறிவித்தது பிஎஸ்என்எல்!

25 January 2021, 8:42 am
BSNL Republic Day Offer 2021
Quick Share

2021 ஆம் ஆண்டு குடியரசு தினத்தை முன்னிட்டு புதிய சலுகைகளை பிஎஸ்என்எல் அறிமுகம் செய்துள்ளது . புதிய சலுகையின் படி, பயனர்கள் ரூ.2,399 மற்றும் ரூ.1,999 விலையிலான  இரண்டு நீண்ட கால திட்டங்களில்  கூடுதல் வேலிடிட்டியைப் பெறுவார்கள். தவிர, ஆபரேட்டர் 30 நாட்கள் செல்லுபடியாகும் புதிய சிறப்பு கட்டண வவுச்சரையும் (STV) அறிமுகப்படுத்தியுள்ளது. புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட வவுச்சர் STV 398 என அழைக்கப்படுகிறது.

பிஎஸ்என்எல் குடியரசு தின சலுகை 2021: விவரங்கள்

ரூ.1,999 விலையிலான வருடாந்திர திட்டம் இப்போது கூடுதல் 21 நாட்கள் வேலிடிட்டி பெறுகிறது, அதாவது பயனர்கள் இப்போது 386 நாட்களுக்கு சேவைகளைப் பெறுவார்கள். மேலும், இந்த பேக் ஒரு நாளுக்கு 100 SMS களுடன் 3 ஜிபி டேட்டாவை வழங்குகிறது. தவிர, இந்த பேக் முதல் 60 நாட்களுக்கு PRBT ட்யூன்ஸ், வரம்பற்ற பாடல் மாற்ற விருப்பம், ஈரோஸ் நவ் சந்தா மற்றும் லோக்தூன் உள்ளடக்கங்களை வழங்குகிறது.

பி.எஸ்.என்.எல் வழங்கும் ரூ.2,399 விலையிலான நீண்ட கால திட்டம், வரம்பற்ற அழைப்பு, ஒரு நாளுக்கு 100 செய்திகள், 365 நாட்களுக்கு இலவச பிஎஸ்என்எல் பிபிஆர்டி ரிங்டோன், ஒரு நாளுக்கு 3 ஜிபி மற்றும் முழு காலத்திற்கும் ஈரோஸ் நவ் சந்தாவை இலவசமாக வழங்குகிறது. மேலும், முன்பு 600 நாட்கள் ஆக இருந்த வேலிடிட்டியைத் தொலைத்தொடர்பு நிறுவனம் இப்போது 365 நாட்களாக குறைத்துள்ளது.

மற்ற பிஎஸ்என்எல் திட்டங்கள்

ரூ.398 விலையிலான திட்டம் டெல்லி மற்றும் மும்பை வட்டங்கள் உட்பட அனைத்து நெட்வொர்க்குகளிலும் வரம்பற்ற அழைப்பை வழங்குகிறது. இது ஒரு நாளுக்கு 100 செய்திகளையும் வழங்குகிறது. பி.எஸ்.என்.எல் நிறுவனத்திடமிருந்து கிடைக்கும் டாப்-அப் திட்டங்கள் ரூ. 120, ரூ. 150, ரூ. 200, ரூ. 220, ரூ. 300, ரூ. 500, ரூ. 550, ரூ. 1,000, ரூ. 1,100, ரூ. 2,000, ரூ. 3,000, ரூ. 5,000, மற்றும் ரூ.6,000 விலைகளில் கிடைக்கின்றன. இவையனைத்தும் முழு டாக்டைம் நன்மைகளுடன் கிடைக்கின்றன. கூடுதலாக, நிறுவனம் சோனிலைவ் ஸ்பெஷல், ஜீ 5 பிரீமியம், யூப் டிவி லைவ், யூப்டிவி FDFS, யூப் டிவி மூவிஸ், VOOT செலக்ட் போன்ற OTT சேவைகளுடன் கூடுதல் தொகுப்புகளை அறிவித்துள்ளது.

Views: - 0

0

0