கூகிள் பிளே ஸ்டோரில் கிளப்ஹவுஸ்! ஆனால் நம்ம இதை யூஸ் பண்ணமுடியாது?!

10 May 2021, 7:41 pm
Clubhouse arrives on Play Store, available to download only in the US for now
Quick Share

கிளப்ஹவுஸ் குறிப்பிட்ட ஆண்ட்ராய்டு பயனர்களுக்கு மட்டும் சோதனை முயற்சியாக பீட்டா பதிப்பில் கிடைப்பதாக தகவல் முன்னதாக தகவல் வெளியாகி இருந்த நிலையில், இப்போது பயன்பாடு பயனர்களின் பொது பயன்பாட்டிற்கு வெளியாகி இருப்பதாகவும் இப்போது கூகிள் பிளே ஸ்டோரில் கிடைப்பதாகவும் கூறப்படுகிறது.

கிளப்ஹவுஸ் இந்த தகவலை ட்விட்டரில் தெரிவித்துள்ளது. இப்போதைக்கு, இந்த பயன்பாடு அமெரிக்காவில் மட்டுமே கிடைக்கிறது, மேலும் வரும் நாட்கள் / வாரங்களில் மற்ற நாடுகளில் உள்ள பயனர்களுக்கு கிடைக்கும் என்று கூறப்படுகிறது. இதனால் இந்த கிளப்ஹவுஸ் ஆன்ட்ராய்டு ஆப் அறிமுகம் இப்போது ஆகியிருந்தாலும், இது இந்திய பயனர்களுக்கு கிடைக்காது. கிளப்ஹவுஸ் ஆன்ட்ராய்டு ஆப் வெளியாகி இருந்தாலும், ஏற்கனவே கிளப்ஹவுஸைப் பயன்படுத்தும் உங்கள் நண்பர் அல்லது  யாரேனும் ஒருவர் உங்களுக்கு Invite கொடுத்தால் மட்டுமே கிளப்ஹவுஸை நீங்கள் பயனப்டுத்த முடியும் என்றும் கூறப்படுகிறது.

கிளப்ஹவுஸின் சர்வரில் அதிக சுமைகளைத் தடுப்பதற்கும், எல்லோருக்கும் சிறப்பாக இந்த ஆடியோ அரட்டை பயன்பாட்டைக் கொண்டு சேர்க்கவும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. iOS பயன்பாட்டை போலவே ஆன்ட்ராய்டு பயன்பாட்டிலும் இன்டர்ஃபேஸ் உள்ளது. இந்திய பயனார்கள் இந்த பயன்பாட்டை பயன்படுத்த மேலும் சில காலம் காத்திருக்க வேண்டியிருக்கும்.

Views: - 152

0

0