தொழிலாளர்களுக்கு முன்கூட்டியே சம்பளத்தை வழங்கிய இந்திய மொபைல் நிறுவனம்

26 March 2020, 11:38 am
Coronavirus: Lava Mobiles to pay part salary in advance to factory workers
Quick Share

இந்தியாவில் வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸ் (COVID-19) தொற்றுநோய்க்கு மத்தியில், உள்நாட்டு ஸ்மார்ட்போன் உற்பத்தியாளர் ஆன லாவா புதன்கிழமை தனது தொழிற்சாலை தொழிலாளர்களின் சம்பளத்தில் ஒரு பகுதியை முன்கூட்டியே செலுத்துவதாக அறிவித்துள்ளது. லாவா புதன்கிழமையான நேற்று சம்பளத்தின் 20 சதவீதத்தை முன்கூட்டியே செலுத்தியது, இது திட்டமிடப்பட்ட தேதிக்கு கிட்டத்தட்ட 12 நாட்களுக்கு முன்னதாகவே இருக்கும் என்று ஒரு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நடவடிக்கையை நிறுவனம் தனது ஊழியர்களின் சிரமத்தைத் தணிக்கவும் அவர்களின் பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வை உறுதிப்படுத்தவும் எடுத்துள்ள பல நடவடிக்கைகளின் ஒரு பகுதியாகும். இந்த சோதனை காலங்களில் தனது அனைத்து ஊழியர்களுக்கும் வீட்டிலுள்ள தங்கள் உதவி ஊழியர்களை கவனித்துக்கொள்வதற்கு ஒரு முன்னுதாரணத்தை அமைக்கும் என்று நிறுவனம் தெரிவித்துள்ளது.

லாவா தனது உற்பத்தி நிலையத்தை நொய்டாவில் மார்ச் 22 முதல் மார்ச் 25 வரை மாநில அரசின் உத்தரவுப்படி மூடியிருந்தது.

கொரோனா வைரஸ் தொற்றுநோய்க்கு எதிரான தடுப்பு நடவடிக்கையாக, பிரதமர் நரேந்திர மோடி செவ்வாய்க்கிழமை நள்ளிரவு முதல் நாடு தழுவிய 21 நாள் முடக்கத்தை அறிவித்துள்ளார். அதனால், இந்த நிறுவனம் இயங்காத நிலையிலும் ஊழியர்களுக்கு பகுதி சம்பளத்தை வழங்கியுள்ளது வரவேற்கத்தக்க ஒரு விஷயமாகும்.