டெல் லேட்டிட்யூட் 7320: அசத்தலான 2-இன்-1 லேப்டாப் அறிமுகம் | விலை & விவரங்கள்

28 April 2021, 2:43 pm
Dell Latitude 7320 Detachable 2-in-1 laptop launched
Quick Share

டெல் நிறுவனம் ஒரு புதிய மடிக்கணினியை தனியே பிரிக்கக்கூடிய திரையுடன் அமெரிக்க சந்தையில் அறிமுகம்  செய்துள்ளது. லேப்டாப் நிறுவனத்தின் லேட்டிட்யூட் தொடரின் கீழ் இந்த ‘டெல் லேட்டிட்யூட் 7320 எனும் பிரிக்கக்கூடிய 2-இன் -1 லேப்டாப் அறிமுகம்  செய்யப்பட்டுள்ளது. இது இன்டெல் செயலிகள் உடன் மட்டுமே வருகிறது மற்றும் AMD CPU இதற்கு இல்லை, ஆனால் பல RAM மற்றும் ஸ்டோரேஜ் விருப்பங்களில் கிடைக்கிறது.

டெல் லேட்டிட்யூட் 7320 பிரிக்கக்கூடிய லேப்டாப்பின் அடிப்படை மாடலுக்கான விலை $1,549 (தோராயமாக ரூ.1.15 லட்சம்) ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இது ஒரே ஒரு சாம்பல் வண்ண மாறுபாட்டில் வழங்கப்படுகிறது. 

இந்த லேப்டாப் அமெரிக்காவில் ஏப்ரல் 27 செவ்வாய்க்கிழமை முதல் வாங்குவதற்கு கிடைக்கும், தற்போது வரை, டெல் அதன் சர்வதேச சந்தைகளில் இந்த லேப்டாப்பை எப்போது வெளியிடும் என்பது குறித்து எந்த தகவலையும் பகிர்ந்து கொள்ளவில்லை.

டெல் லேட்டிட்யூட் 7320 லேப்டாப் விவரக்குறிப்புகள்

டெல் லேட்டிட்யூட் 7320 லேப்டாப் 13 அங்குல முழு HD+ (1,920×1,280 பிக்சல்கள்) டிஸ்ப்ளே, இது 500-நைட்ஸ் உச்ச பிரகாசம் மற்றும் கார்னிங் கொரில்லா கிளாஸ் DX பாதுகாப்பைக் கொண்டுள்ளது. மடிக்கணினி 11 வது ஜெனரல் இன்டெல் கோர் i7 விப்ரோ செயலி மற்றும் 16 ஜிபி வரை LPDDR4X SDRAM 4,266 MHz மற்றும் 1 TB PCIe M.2 PCIe SSD வரையிலான ஆதரவுடன் இயங்குகிறது. 

மென்பொருளைப் பொறுத்தவரை, விண்டோஸ் 10 ப்ரோ, விண்டோஸ் 10 ஹோம் மற்றும் விண்டோஸ் 10 எண்டர்பிரைஸ் உள்ளிட்ட மூன்று விருப்பங்களை மடிக்கணினிக்கு டெல் வழங்குகிறது.

டெல் லேட்டிட்யூட் 7320 லேப்டாப்பின் பாதுகாப்பில் டெல் நிறுவனம் அதிக கவனம் செலுத்துகிறது மற்றும் விண்டோஸ் ஹலோ, ஸ்மார்ட் கார்டு ரீடர் மற்றும் தொடர்பு இல்லாத ஸ்மார்ட் கார்டு ரீடர் போன்ற கூடுதல் பாதுகாப்பு அம்சங்களை இதில் சேர்த்துள்ளது. 

டெல் லேட்டிட்யூட் 7320 பிரிக்கக்கூடிய லேப்டாப்பின் இணைப்பு விருப்பங்களில் வைஃபை 6, புளூடூத் v5.1, குவால்காம் ஸ்னாப்டிராகன் X20 சிப்செட்களுடன் கூடுதல் மொபைல் பிராட்பேண்ட், இரண்டு தண்டர்போல்ட் 4 போர்ட்கள், ஆடியோ ஜாக் மற்றும் கூடுதலாக touch fingerprint reader போன்ற அம்சங்களும் அடங்கும்.

Waves MaxxAudio Pro தொழில்நுட்பம் மற்றும் இரண்டு இரட்டை வரிசை மைக்ரோஃபோன்களுடன் இரண்டு ஸ்டீரியோ ஸ்பீக்கர்களையும் பெறுவீர்கள். டெல் லேட்டிட்யூட் 7320 பிரிக்கக்கூடியது ExpressCharge 2.0 க்கான ஆதரவுடன் 40Whr பேட்டரி உடன் ஆதரிக்கப்படுகிறது.

முன்பக்கத்தில் எதிர்கொள்ளும் 5 MP வெப்கேம் 1080p தெளிவுத்திறனையும், 8 MP கேமராவையும் ஆதரிக்கிறது. 

மடிக்கணினியின் சென்சார்களில் கைரோஸ்கோப், இ-காம்பஸ் / மேக்னெட்டோமீட்டர், முடுக்கமானி, GPS (WWAN கார்டு வழியாக மட்டும்) மற்றும் சுற்றுப்புற ஒளி சென்சார் போன்றவையும் உள்ளது.

Views: - 100

0

0

Leave a Reply