உங்கள் மொபைலை சார்ஜ் செய்யும் போது தப்பித்தவறி கூட இந்த 3 தவறுகளை பண்ண்டாதீங்க!

16 September 2020, 9:18 pm
Do you make these 5 mistakes while charging mobile
Quick Share

இன்றைய காலக்கட்டத்தில், மொபைல் என்பது அனைவருக்கும் மிக முக்கியமான தேவையாக மாறியுள்ளது. ஆனால் அதிக பயன்பாட்டினால் இப்போதெல்லாம் ஸ்மார்ட்போனின் பேட்டரியும் மிக விரைவாக முடிவடைகிறது, இதுபோன்ற சூழ்நிலையில், தொலைபேசியை மீண்டும் மீண்டும் சார்ஜ் செய்ய வேண்டியதற்கான தேவையும் உள்ளது. ஆனால் மொபைல் சார்ஜிங் செய்யும்போது நாம் செய்யக்கூடாத சில தவறுகள் உள்ளது, ஆனால் பொதுவாக அவை மக்களுக்கு தெரிவதில்லை. அவை கவனிக்கப்படாவிட்டால், தொலைபேசி விரைவாக சேதமடையும் அல்லது அதன் செயல்திறன் குறையும்.

எனவே நீங்கள் தவிர்க்க வேண்டிய அந்த தவறுகளைப் பற்றி தான் இன்று இந்தப் பதிவில் உங்களுக்கு சொல்லப்போகிறோம்.

  • மக்கள் தங்கள் மொபைலை சார்ஜ் செய்ய எதாவது ஒரு சார்ஜரை பயன்படுத்துகிறார்கள். ஆனால், அப்படி செய்யக்கூடாது. அவ்வாறு செய்வதன் மூலம், உங்கள் மொபைல் பேட்டரி மிகவும் சூடாகும். இது மொபைலின் பேட்டரி ஆயுளையும் குறைக்கும். சீக்கிரமே உங்கள் போன் பேட்டரி உப்பிவிடும் அல்லது வெடிக்கவும் வாய்ப்புகள் உண்டு. எனவே எப்போதும் தொலைபேசி உடன் வரும் சார்ஜருடன் மட்டுமே உங்க போனை சார்ஜ் செய்ய வேண்டும்.
  • மொபைலை எப்போதும் 100% சார்ஜ் செய்ய முயற்சிக்காதீர்கள். இது தொலைபேசியின் பேட்டரியின் ஆயுளைக் குறைக்கும். அதே போல் சார்ஜ் குறையும்போது பூஜ்ஜிய சதவிகிதம் வரும் வரை காத்திருக்க வேண்டாம், அதுவும் பேட்டரி ஆயுளை பாதிக்கும். குறைந்த 15% இருக்கும் போது மீண்டும் சார்ஜ் செய்து கொள்ளுங்கள். சார்ஜ் குறைந்தால் மட்டும் சார்ஜ் செய்யுங்கள்.
  • தூங்குவதற்கு முன் மொபைலை சார்ஜரில் போட்டுவிட்டு காலை வரை மொபைலை அகற்றாமல் இருப்பது மிகவும் தவறு. மொபைலை சார்ஜ் செய்ய இது சரியான வழி அல்ல. இதனால் பேட்டரி வெப்பமடைந்து வீணாகும்.

Views: - 5

0

0