டாப் கியரில் பெட்ரோல் விலை… ரிவர்ஸ் கியரில் மைலேஜ்! மைலேஜ் அதிகமாக என்ன பண்ணலாம்?

8 July 2021, 12:19 pm
Easy Tips To Increase Your Bikes Mileage
Quick Share

ஒரு இரண்டு மூன்று வருடங்களுக்கு முன்னால் எல்லாம் பெட்ரோல் விலை இவ்வளவு சீக்கிரம் சதம் அடிக்கும்னு கனவிலும் கூட நினைச்சுப் பார்த்தே இருக்க மாட்டோம். ஆனால், இன்னிக்கோ 100 ரூபாயையும் தாண்டி பெட்ரோல் விலை எக்கச்சக்கமாக எகிறிக்கிட்டே போகுது. நம்மால பெட்ரோல் விலையைக் குறைக்க முடியாது. ஆனா, மைலேஜை முடிஞ்சவரை அதிகப்படுத்தலாம். அதுக்கு என்னவெல்லாம் பண்ணலாம் என்னவெல்லாம் பண்ணக்கூடாது அப்படிங்கிறத தான் தெரிஞ்சுக்க போறோம். 

 • நம்ம பண்ற முதல் தப்பே பைக் ஸ்டார்ட் பண்ணும்போது தான். பைக் ஸ்டார்ட் பண்ணும்போது ஆக்ஸிலரேட்டரை சர சர ன்னு முறுக்கிக்கிட்டே இருப்போம். இதனால பெட்ரோல் தான் அதிகம் விரயமாகும். ஆனால் அப்படி செய்ய தேவையில்லை. இப்போ வர பைக் எல்லாமே சாஃப்ட் டச் எலக்ட்ரிக் ஸ்டார்ட் தான். அதனால நீங்க ஸ்டார்ட் பண்ணதும் அப்படியே மூவ் பண்ணலாம்.
 • அதே போல நிறைய பேர் சிக்னல்ல நிக்கும்போதுகூட கிளட்ச்  பிடிச்சுகிட்டே ஆக்ஸிலேட்டரை முறுக்கிக்கிட்டு இருப்பாங்க. அதுவும் தேவையில்லங்க. கியர் மாற்றும் போது மட்டும் நாம கிளட்ச் பிடிச்சா போதும். மற்ற நேரத்துல கிளாட்ச் பக்கத்துலயே கை போகவே கூடாது.
 • லாங் டிராவல் போறப்போ நிறைய பேர் கார் கண்ணாடிய இறக்கி விட்டுட்டு ஏசி போடாம போவாங்க. இதனால பெட்ரோல் மிச்சமாகும்னு நினைப்பாங்க. ஆனா உண்மையா சொல்லப்போனா இதனால தான் அதிக பெட்ரோல் செலவே ஆகும். ஆமாங்க, கார் டைனமிக்ஸ் பொறுத்தவரை கண்ணாடி எல்லாம் மூடியிருக்கும் போது தான் அதிக ஃபியூயல் செலவாகும். ஏன்னா, வேகமாக நீங்க போறப்போ காத்து கார்குள்ள புகும்போது அதையும் சேர்த்துதான் கார் தள்ளிக்கிட்டு போகணும். அப்போ லோட் அதிகம் ஆகுறதுனால அதிகமா பெட்ரோல் செலவாகும். அதனால இனிமே நீங்க கண்ணாடியை இறக்கிவிட்டு மிச்சப்படுத்துறேன்னு அதிகமாக செலவு பண்ணாதீங்க. 
 • சாதாரணமா பைக்ல ஐட்லிங் ரேஞ்ச் 1200 முதல் 1500 rpm வரை இருக்கும்.   ஆனா சிலர் ஓவர் பிக்-அப் வேணுன்னு லோக்கல் மெக்கானிக் கிட்ட கேட்டு ஐட்லிங் ரேஞ்ச் அதிகமா வச்சிருப்பாங்க. ஆனால், இப்படி செய்யுறதுனால உங்க மைலேஜ் தான் குறையும். இது உங்களுக்கு பாதுகாப்பும் இல்லை. கிளட்ச் பிளேட், இன்ஜின் எல்லாம் முறையா சார்வீஸ் செஞ்சாலே நல்ல பிக்-அப்பும் மைலேஜும் கிடைக்கும்.
 • இப்போ டியூப்லெஸ் டயர் வந்துட்டதுனால நிறைய பேர் சரியா டயருக்கு காத்து அடிக்கிறதே இல்லை. நாளைக்கு… நாளைக்கு…ன்னு தள்ளிப்போட்டு காத்து குறைஞ்சது கண்ணுக்கே தெரியும்போது தான் காத்து அடிப்பாங்க. ஆனால் அதனால உங்க பைக் மைலேஜ் ரொம்பவே குறைஞ்சிடும். மைலேஜ் வேணும்னா வாரம் ஒரு முறையாச்சும் ஏர் செக் பண்ணனும் அப்படிங்கிறத மறக்காம  இருக்கிறது ரொம்பவே முக்கியம். முடிஞ்சா போனில் ரீமைண்டர், அலாரம் எல்லாம் செட் பண்ணியாச்சும் காத்து அடிச்சிருங்க.
 • இப்போ கார்கள்ல ஆட்டோ ஸ்டார்ட்/ ஸ்டாப் சிஸ்டம், பைக்ல இன்ஜின் கில் ஸ்விட்ச் எல்லாமே ஒரு ஆப்ஷனா கொடுக்குறாங்க. இது எதுக்கு தெரியுமா? சிக்னலில் நீங்கள் 50 முதல் 60 வினாடிகளுக்கு மேல் நிற்க வேண்டியிருந்தா உங்க இன்ஜினை ஆஃப் செய்யுறது ரொம்பவே நல்லது. ஏன்னா, நீங்க ரன்னிங்ல இருக்கும்போது ஆகுற பியூயல் பயன்பாட்டை விட ஒரே இடத்துல இன்ஜின் ஓடாம நிக்குறப்போ பியூயல் அதிகமா செலவாகும். இது போல சிக்னல் நிக்கும்போது அல்லது சாலையோரங்கள்ல உங்க நண்பர பாத்து பேசும்போது எல்லாம் பைக்ல இருக்க இன்ஜின் கில் ஸ்விட்ச் உங்க நினைவுக்கு வரணும். ஆனா இப்போ வர கார்கள்ல இது ஆட்டோமேட்டிக் என்பதால இன்னும் சிறப்பு.  
 • கியர் போடும்போதும் ரொம்பவே கவனமா இருக்கணும். கியர் மாத்தும் போது சரியாக மாறவில்லை என்றால் இன்ஜினில் இருந்து knocking சவுண்ட் வரும். இதனால பியூயல் ரொம்ப அதிகமாக பயன்படுத்தப்படும். அதனால கியர் மாத்தும்போது கவனத்தோடு கிளட்ச் பிடித்து கியர் மாற்ற வேண்டும்.
 • முடிந்தவரை பைக்குகளில் செயின் ஸ்ப்ராக்கெட்ஸ் தூசி மண் அடிக்காமல் சுத்தமா இருக்குதா என்பதை அப்பப்போ செக் செய்து கொள்ளுங்கள். அழுக்கு மற்றும் தூசி எல்லாம் செயினில் படிந்திருந்தால் செயல் சுற்றுவதற்கு அதிகமா பவர் தேவைப்படும். இதனால் பெட்ரோல் தான் அதிகமாக விரயமாகும். இதனால வாரத்திற்கு ஒரு முறையாவது செயினுக்கு கியர் எண்ணெய் அல்லது லூப்ரிகன்ட் எண்ணெய் எல்லாம் விட்டு சுத்தமாக வைதுத்துக்கொண்டு நல்ல மைலேஜ் பெறுங்கள்.
 • முடிந்தவரை வண்டியை வெயிலில் பார்க் செய்யாதீங்க. நிழலில் பார்க் செய்வது தான் பெஸ்ட். வெயிலில் நிறுத்தினால் பியூயல் எவாபொரேட் ஆகும் என்பதால் கண்டிப்பாக மைலேஜ் கிடைக்காது. முடிந்தவரை எங்கு நிழல் கிடைக்கிறதோ அங்கு பைக்கை பார்க் செய்து லாக் செய்வது நல்லது.
 • உங்க ஊரிலேயே தரமான பெட்ரோல் எங்க கிடைக்கும்னு உங்களுக்கு தெரியும். அந்த இடத்திலேயே வாடிக்கையா பெட்ரோல் போடுங்க. கலப்படம் இருந்தாலும் மைலேஜ் வராது, இன்ஜினும் சீக்கிரம் ஸ்பாயில் ஆகிடும். நல்ல தரமான பெட்ரோல் கிடைக்கும் இடத்தில் பெட்ரோல் போடுவது ரொம்பவே நல்லது.
 • பைக் நல்லாதானே இருக்கு அப்படினும், செலவு ஆகுமே அப்படினும் வருஷக்கணக்குல பைக், கார் எல்லாம் சர்வீஸ் பண்ணாம வச்சிருந்த நஷ்டம் உங்ககுக்கே தான். சரியான டைமுக்கு, அல்லது குறிப்பிட்ட கிமீ ஓடின பிறகு வண்டிய நல்ல சர்வீஸ் சென்டர்ல கொடுத்து சர்வீஸ் பண்றது ரொம்பவே நல்லது. இன்ஜின் ஆயிலை அவ்வப்போது மாற்றிவிடுவதும் ரொம்பவே நல்லது.
 • அடிக்கடி சடன் பிரேக் போடுவது, வேகமாக ஆக்ஸிலரேட்டரை முறுக்குவது, ரேஷ் டிரைவிங் செய்வது போன்ற சாகசமெல்லாம் செய்து கொண்டிருந்தால் மைலேஜும் கிடைக்காது உங்கள் உயிருக்கு பாதுகாப்பும் இருக்காது. அமைதியாக சரியான சாலை விதிமுறைகளை ஃபாலோ செய்து மேற்சொன்ன டிப்ஸையும் ஃபாலோ பண்ணினாலே உங்களுக்கும் நல்லது, உங்கள் பணத்துக்கும் நல்லது. 

Views: - 177

0

0