“எல்லாருக்கும் ராஜாவா நான்…!” மீண்டும் சமூக ஊடகத்தின் ராஜா என்று நிரூபித்தது “பேஸ்புக்”

1 February 2021, 12:36 pm
With 2.8 Billion Monthly Active Users, Facebook Is The King Of Social Media
Quick Share

கடந்த வாரம், பேஸ்புக் 2020 ஆம் ஆண்டின் கடைசி நிதியாண்டிற்கான முடிவுகளை அறிவித்தது. முடிவுகளின்படி, உலகின் மிகப்பெரிய சமூக ஊடக தளம் ஆன பேஸ்புக் கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் மட்டும் 1.84 பில்லியன் அதாவது 184 கோடி தினசரி செயல்பாட்டில் உள்ள பயனர்களை கொண்டிருந்தது.

நிறுவனம் வெளியிட்டுள்ள தகவல்களின்படி, பேஸ்புக் கடந்த மாதம் தினசரி பயனர்களில் கடந்த ஆண்டை விட 11 சதவீதம் வளர்ச்சியைக் கண்டுள்ளது. இதற்கிடையில், மாதாந்திர செயலில் உள்ள பயனர்களில் கடந்த ஆண்டை விட 12 சதவிகித வளர்ச்சியும்  (280  கோடி பயனர்கள்) காணப்பட்டுள்ளது.

பேஸ்புக் தனது அனைத்து தயாரிப்புகளின் மூலம், 2020 டிசம்பரில் சராசரியாக 2.60 பில்லியன் (260 கோடி) தினசரி பயனர்களைப் பதிவு செய்துள்ளது, இது கடந்த ஆண்டை விட 15 சதவீதம் அதிகரித்துள்ளது. இந்த குழுவில் மாதாந்திர செயலில் உள்ளவர்களைப் பொறுத்தவரை, 2020 டிசம்பர் 31 ஆம் தேதி நிலவரப்படி பேஸ்புக் 3.30 பில்லியன் (330 கோடி) பயனர்களை பதிவு செய்துள்ளது, இது கடந்த ஆண்டை விட 14 சதவீதம் அதிகரித்துள்ளது.

இந்த அதிக எண்ணிக்கையிலான பயனர்களுடன், மற்ற செயலிகளை காட்டிலும், பேஸ்புக் முதன்மை இடம் வகிக்கிறது. மேலும், சமூக ஊடங்களின் ராஜா நான் தான் என்றும் நிரூபித்துள்ளது.

Views: - 0

0

0