Xiaomi | சியோமி Mi TWS இயர்போன்ஸை 2C யை இலவசமாக பெற செம சான்ஸ்!

21 January 2021, 4:04 pm
Get Mi TWS Earphones 2C Free On Purchase Of Mi Smart Speaker
Quick Share

TWS இயர்பட்ஸ், ஹெட்ஃபோன்கள், ஸ்பீக்கர்கள் மற்றும் பிற ஆடியோ உபகாரணங்களுக்கான தேவை அதிகரித்துள்ளன. பல OEM நிறுவனங்கள் இந்த பிரிவில் நுழைந்துக்கொண்டிருந்தாலும், சியோமி அதன் ஆடியோ உபகாரணங்களுக்குப் பல கவர்ச்சிகரமான தள்ளுபடியை வழங்கி பல வாடிக்கையாளர்களைத் தன் பக்கம் இழுத்துக்கொள்கிறது. அந்த வகையில் சமீபத்திய சலுகையாக கூகிள் அசிஸ்டெண்ட்டுடன் கட்டமைக்கப்பட்ட Mi ஸ்மார்ட் ஸ்பீக்கரை வாங்கும்போது சியோமி Mi TWS இயர்போன்ஸ் 2C சாதனத்தை இலவசமாக வாங்கலாம்.

சியோமி கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தில் இந்தியாவில் Mi ஸ்மார்ட் ஸ்பீக்கரை அறிமுகப்படுத்தியது. புதிய ஸ்பீக்கர் Xiao AI ஸ்பீக்கர் ஆர்ட் சாதனத்தின் மறுபெயரிடப்பட்ட சாதனமாகும், இது கூகிள் அசிஸ்டன்ட்டுக்கான உதவியுடன் கட்டமைக்கப்பட்டுள்ளது. குரல் கட்டளைகளுடன் மற்ற ஆடியோ கேஜெட்டுகளைப் போலவே இந்த ஸ்பீக்கரும் செயல்படுகிறது. அதனுடன், நிறுவனம் Mi 10T மற்றும் Mi 10T Pro உடன் இணைந்து Mi True வயர்லெஸ் இயர்போன்கள் 2C ஐ அறிமுகப்படுத்தியது.

குடியரசு தின கொண்டாட்டங்களை முன்னிட்டு இந்தியாவில் மிகப்பெரிய விற்பனையை பிளிப்கார்ட் மற்றும் அமேசான் நடத்தி வருகின்றன. அமேசான் மற்றும் பிளிப்கார்ட் குடியரசு தின விற்பனை இரண்டுமே ஸ்மார்ட்போன்கள், இயர்போன்கள், டி.வி.க்கள் மற்றும் பல கேஜெட்களில் பெரும் விலைக் குறைப்பை வழங்குகின்றன. இந்த பட்டியலில் பல சியோமி கேஜெட்டுகளும் சேர்க்கப்பட்டுள்ளது.

கூடுதலாக, சியோமி தனது கேஜெட்களுக்கு அதன் சில்லறை விற்பனை நிலையங்கள் மற்றும் ஆன்லைன் ஸ்டோர்களிலும் பிரத்தியேக தள்ளுபடிகளை வழங்குகிறது. 

சியோமி Mi ஸ்மார்ட் ஸ்பீக்கர் சலுகை

தேர்ந்தெடுக்கப்பட்ட ஸ்மார்ட்போன்கள், Mi நோட்புக், Mi டிவி மற்றும் Mi ஏர் பியூரிஃபையர் வாங்குவதில் Mi ஸ்மார்ட் ஸ்பீக்கருக்கு கூடுதல் தள்ளுபடியையும் சியோமி வழங்குகிறது. வாடிக்கையாளர்கள் ஸ்மார்ட் ஸ்பீக்கரை Mi.com மற்றும் Flipkart இல் பாதி விலையில் பெற முடியும்.

தனித்துவமான சலுகைகளில் ஒன்று ரூ.3,999 மதிப்புள்ள Mi ஸ்மார்ட் ஸ்பீக்கரை வாங்குவது. இதை வாங்குபவர்களுக்கு ரூ. 2,499 மதிப்புள்ள Mi ட்ரூ வயர்லெஸ் இயர்போன்ஸ் 2C முற்றிலும் இலவசம். இந்த தனிப்பட்ட விற்பனை சலுகையை Mi.com இல் மட்டுமே பெற முடியும்.”

நீங்கள் சியோமி Mi ட்ரூ வயர்லெஸ் இயர்போன்ஸ் 2C மட்டுமே வாங்க விரும்பினால், அதற்கும் இரண்டு தள்ளுபடிகள் உள்ளன. முதலில், இயர்போன்களின் விலை ரூ.2,499 ஆகும். குடியரசு தின விற்பனை நடைபெற்று வரும் நிலையில், Mi ட்ரூ வயர்லெஸ் இயர்போன்ஸ் 2C ரூ.1,999 விலையில் கிடைக்கும். இந்த விற்பனை இப்போது அமேசான், பிளிப்கார்ட் மற்றும் Mi.com ஆகியவற்றில் நேரலையில் உள்ளது மற்றும் ஜனவரி 24 உடன் முடிவடையும். வாங்குபவர்கள் அதற்குள் வாங்குவது சிறப்பு.

Views: - 0

0

0