நம்பவே முடியல… ரூ.98 க்கு அன்லிமிடெட் ஆ! அசத்தும் பிஎஸ்என்எல்

15 May 2021, 5:07 pm
Get unlimited data with BSNL Rs 98 prepaid plan
Quick Share

வீட்டிலிருந்து வேலைச் செய்யும் மக்கள் மற்றும் வீட்டிலிருந்தே ஆன்லைன் மூலம் படிக்கும் மாணவர்களுக்கு இணைய சேவை மிகவும் தேவை என்பதால், இணையத்திற்கான அவசியம் அதிகரித்துள்ளது. இருப்பினும், அனைத்து முன்னணி தொலைத் தொடர்பு நிறுவனங்களின் அனைத்து திட்டங்களும் விலை உயர்ந்ததாக உள்ளன, அன்லிமிடெட் டேட்டா திட்டங்கள் அனைத்தும் பல நூறு கொடுத்தால் மட்டுமே கிடைக்கும் வகையில் உள்ளன. ஆனால் 100 ரூபாய்க்கும் குறைவான விலையிலான திட்டம் ஒன்றை பிஎஸ்என்எல் வழங்குகிறது. அது என்ன மாதிரியான திட்டம் என்பதை என்னென்ன நன்மைகள் கிடைக்கின்றன என்பதை பற்றி தான் இந்த பதிவில் பார்க்கப்போகிறோம்

பிஎஸ்என்எல் ரூ.98 வவுச்சர்

மலிவு விலையில் இணைய சேவையை வழங்க, பிஎஸ்என்எல் ரூ.98 டேட்டா வவுச்சர் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது, இது 22 நாட்களுக்கு வரம்பற்ற இணைய சேவையை வழங்குகிறது. இந்த திட்டத்துடன் பயனர்கள் தினசரி 2 ஜிபி அதிவேக இணைய சேவையைப் பெறுவார்கள், அதன் பிறகு வேகம் 40 Kbps ஆக குறைக்கப்படும்.

பிஎஸ்என்எல் ரூ.97 வவுச்சர்

ரூ.97 க்கும் பிஎஸ்என்எல் ஒரு டேட்டா வவுச்சர் வழங்குகிறது. இந்த 18 நாட்களுக்கு வரம்பற்ற இலவச இணைய சேவையை வழங்குகிறது. சந்தாதாரர்களுக்கு தினசரி 2 ஜிபி அதிவேக தரவு கிடைக்கும், அதன் பிறகு வேகம் 80 Kbps ஆக குறைக்கப்படுகிறது. இந்த திட்டத்துடன் 100 எஸ்எம்எஸ் மற்றும் Lokdhun உள்ளடக்கத்துடன் வரம்பற்ற அழைப்பு சேவையும் கிடைக்கும்.

பிஎஸ்என்எல் தவிர, பிற தொலைத் தொடர்பு ஆபரேட்டர்கள் வாடிக்கையாளர்களை ஈர்க்க சில குறைந்த விலையிலான திட்டத்தை வழங்குகிறார்கள். ஏர்டெல், Vi மற்றும் ஜியோவின் திட்டங்களும் ரூ.100 க்கு கீழ் கிடைக்கின்றன. அன்லிமிடெட் சலுகைகள் இந்த திட்டத்தில் கிடைக்காது. ஆனால் சில நன்மைகள் கிடைக்கும்.

ஏர்டெல் ரூ.98 டேட்டா வவுச்சர்

ஏர்டெல் வழங்கும் ரூ.98 திட்டம் 12 ஜிபி அதிவேக தரவை வழங்குகிறது. இந்த திட்டத்திற்கான வேலிடிட்டி ஏற்கனவே செயலில் இருக்கும் திட்டத்தின் செல்லுபடியைப் பொறுத்தது.

ஜியோ ரூ.101 4ஜி வவுச்சர்

இந்தியாவின் மிகப்பெரிய தொலைத் தொடர்பு நிறுவனமான ரிலையன்ஸ் ஜியோ ரூ.101 விலையில் ஒரு டேட்டா வவுச்சரை வழங்குகிறது. இந்த திட்டம் 12 ஜிபி அதிவேக தரவை வழங்குகிறது. 

Vi ரூ.98 வவுச்சர்

Vi வழங்கும் ரூ.98 வவுச்சருடன் 12 ஜிபி அதிவேக இணைய சேவை கிடைக்கும், இது 28 நாட்கள் செல்லுபடியாகும்.

Views: - 260

0

0