43000 ஆண்டுகளுக்கு முன்பு “பேய் மனிதர்களோடு” வாழ்ந்ததா மனித இனம்?

14 February 2020, 11:21 am
Ghost ancestors? African DNA study detects mysterious human species
Quick Share

மேற்கு ஆப்பிரிக்கர்களின் மரபணுக்களை ஆராய்ந்த விஞ்ஞானிகள் பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு ஆப்பிரிக்காவில் மர்மமான முறையில் அழிந்துபோன மனிதர்களை (‘Ghost’ Ancestor) போன்ற இனங்கள் நமது சொந்த மனித இனங்களுடன் வாழ்ந்ததற்கான அறிகுறிகளைக் கண்டறிந்துள்ளனர், இது மனிதகுலத்தின் சிக்கலான மரபணு வம்சாவளியின் சமீபத்திய சான்றாகும்.

Ghost ancestors? African DNA study detects mysterious human species

இன்றைய மேற்கு ஆப்பிரிக்கர்களில் அழிந்துபோன மனித இனத்தின் மரபணு வம்சாவளியை இன்றளவும் 2% முதல் 19% பேரில் கண்டுபிடிப்பதாக ஆய்வுகள் சுட்டிக்காட்டியுள்ளது – ஆராய்ச்சியாளர்கள் இதனை “கோஸ்ட் பாப்புலேஷன்” (ghost population) என்று அழைக்கின்றனர்.

லாஸ் ஏஞ்சல்ஸ் (யு.சி.எல்.ஏ) மனித மரபியல் மற்றும் கணினி அறிவியல் பேராசிரியர் ஸ்ரீராம் சங்கரராமன் கூறுகையில், ஏறக்குறைய 43,000 ஆண்டுகளுக்கு முன்பு  இந்த இனக்கலப்பு நிகழ்ந்ததாக நாங்கள் மதிப்பிடுகிறோம் என்று தெரிவித்துள்ளார்.

Ghost ancestors? African DNA study detects mysterious human species

ஹோமோ செபியன்ஸ் முதலில் ஆப்பிரிக்காவில் 300,000 ஆண்டுகளுக்கு முன்னர் தோன்றினர், பின்னர் உலகம் முழுவதும் பரவினர், பின்னர் நியண்டர்தல்ஸ் மற்றும் குறைவாகவே அறியப்பட்ட டெனிசோவன்ஸ் உட்பட அழிந்துபோன பிற மனித இனங்களையும் எதிர்கொண்டனர்.

முந்தைய மரபணு ஆராய்ச்சிகள், நம் மனித இனங்கள் நியண்டர்தல் மற்றும் டெனிசோவான் ஆகிய இரண்டு இனங்களுடனும் கலந்திருந்ததையும், ஆப்பிரிக்காவிற்கு வெளியேயும் வாழும் தற்போதைய மனிதர்களிடமும் இந்த இரண்டு இனங்களின் டி.என்.ஏ க்கள் இன்றளவும் காணப்படுவதாகவும் ஆராய்ச்சியாளர்கள் சொல்கின்றனர். ஆனால் நியண்டர்தல்களின் ஏராளமான புதைபடிவ பதிவுகளும், டெனிசோவன்களின் ஒரு சில புதைபடிவங்களும் இருக்கும்போது, ​​புதிதாக அடையாளம் காணப்பட்ட “கோஸ்ட் பாப்புலேஷன்” மிகவும் புதிரானதாக உள்ளது என்றும் ஆராச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

Ghost ancestors? African DNA study detects mysterious human species

இந்த மக்கள் பற்றி என்ன விவரங்கள் அறியப்பட்டுள்ளன என்று கேட்டபோது, “இந்த நிலையில் எதுவும் பெரிதாக கண்டறியப்படவில்லை, இந்த மக்கள் எங்கு வாழ்ந்திருக்கலாம், அது முன்பே அறியப்பட்ட புதைபடிவங்களுடன் ஒத்திருக்கிறதா, அதன் இறுதி அழிவு எப்படி நிகழ்ந்தது என்பது எங்களுக்கு இன்னும் தெரியவில்லை, மேலும் ஆராய்ச்சிகள் தொடர்கின்றன” என்று சங்கரராமன் அவர்கள் தெரிவித்துள்ளார்.