புதிய பிக்சல் 5a 5G ஸ்மார்ட்போன் உடன் மிட்-ரேஞ்ச் பிரிவில் களமிறங்கியது கூகிள் | விலை & விவரங்கள் இங்கே | Google Pixel 5a

Author: Hemalatha Ramkumar
18 August 2021, 1:22 pm
Google announces the new Pixel 5a 5G with a bigger battery, water resistance
Quick Share

பிக்சல் 5a ஸ்மார்ட்போன் உடன் இடைப்பட்ட ஸ்மார்ட்போன் பிரிவில் கூகுள் மீண்டும் காலடி எடுத்து வைத்துள்ளது. 

கடந்த வருடம் அறிமுகமான பிக்சல் 4A ஸ்மார்ட்போனைத் தொடர்ந்து இந்த புதிய போன் அறிமுகம் செய்யபட்டுள்ளது. 

 • இந்த புதிய பிக்சல் 5a ஸ்மார்ட்போன் $449 விலையில், ஆகஸ்ட் 26 அன்று அமெரிக்கா மற்றும் ஜப்பானில் விற்பனைக்கு வரும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. 
 • பிக்சல் 5a சற்று பெரிய திரை, நீர் எதிர்ப்பு திறனுக்கான IP67 மதிப்பீடு மற்றும் மிகப் பெரிய பேட்டரி ஆகியவற்றுடன் வருகிறது.
 • பிக்சல் 5a 5ஜி நடுத்தர அளவிலான ஸ்மார்ட்போன் சந்தையை இலக்காகக் கொண்டது. 
 • இது ஆப்பிள் ஐபோன் SE (2020) மற்றும் சாம்சங் கேலக்ஸி A22 5ஜி ஸ்மார்ட்போன்களுடன் போட்டியிடும். 
 • கூகுளின் முக்கிய இலக்கு சந்தை இந்தியா அல்ல என்பதால் பிக்சல் 5a வெளியீடு இந்தியாவில் எப்போது நிகழும் என்பது குறித்து தகவல் ஏதும் வெளியாகவில்லை.

பிக்சல் 5a 5 ஜி: குறிப்புகள், அம்சங்கள்

 • பிக்சல் 5a 5ஜி ஸ்மார்ட்போன் 60 Hz புதுப்பிப்பு வீதம் மற்றும் FHD+ ரெசல்யூஷன் உடன் 6.34 இன்ச் OLED டிஸ்பிளே உடன் பொருத்தப்பட்டுள்ளது. இந்த சாதனம் ஒரே ஒரு கருப்பு வண்ண விருப்பத்தில் கிடைக்கும். 
 • இது ஆலிவ் நிற பவர் பட்டன் மற்றும் பஞ்ச்-ஹோல் டிஸ்பிளே வடிவமைப்பையும் கொண்டிருக்கும்.
 • இந்த ஸ்மார்ட்போன் குவால்காமின் ஸ்னாப்டிராகன் 765 ஜி செயலி உடன் இயக்கப்படுகிறது. 
 • இது 6 ஜிபி RAM மற்றும் 128 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் உடன் இயக்கப்படுகிறது. 
 • இது உள்ளமைக்கப்பட்ட டைட்டன் M பாதுகாப்பு சிப் கொண்டு இயங்கும் மற்றும் 3.5 மிமீ ஹெட்போன் ஜேக் கொண்டிருக்கும். 
 • ஸ்மார்ட்போன் 4,680 MaH பேட்டரியை பேக் செய்கிறது, ஒரு முறை சார்ஜ் செய்தால் 48 மணிநேர பேட்டரி ஆயுளை வழங்கும் என்று கூகுள் கூறுகிறது.
 • கேமரா அம்சங்களைப் பொறுத்தவரை, பிக்சல் 5a 5ஜி இரட்டை கேமரா அமைப்புடன் 12 MP டூயல்-பிக்சல் சென்சார் மற்றும் 16 MP அல்ட்ரா-வைட் ஆங்கிள் லென்ஸுடன் வருகிறது. 
 • ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 11 உடன் வழங்கப்படும். 
 • கூகுளின் சமீபத்திய 5ஜி ஸ்மார்ட்போன் IP67 மதிப்பிடப்பட்ட முதல் A-தொடர் பிக்சல் ஸ்மார்ட்போன் ஆகும், அதாவது அது நீர் மற்றும் தூசி-எதிர்ப்புத் திறன் கொண்டது.

Views: - 396

0

0