பிளே ஸ்டோரிலிருந்து 8 செயலிகள் அதிரடி நீக்கம் | உங்கள் போனிலும் உடனே Uninstall பண்ணிடுங்க! | Fake Crypto Mining Apps

Author: Hemalatha Ramkumar
23 August 2021, 12:50 pm
Google removes 8 fake cryto mining apps from Play Store
Quick Share

கிரிப்டோகரன்சி கிளவுட் மைனிங் அப்ளிகேஷன்கள் என 8 தீங்கிழைக்கும் செயலிகள் பிளே ஸ்டோரில் இருப்பதை கண்டறிந்த கூகுள் சமீபத்தில் அவற்றை நீக்கியது. 

கிரிப்டோகரன்சி மோகம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், அதில் முதலீடு செய்ய, குறுக்கு வழிகளில் பிட்காயின்களை வாங்க என பல்வேறு செயலிகள் மற்றும் வலைத்தளங்கள் அறிமுகம் செய்யப்பட்டு வருகின்றன. அவற்றில் தீங்கிழைக்கும் செயலிகளும் உள்ளன. அதை கண்டறிந்த கூகிள் பிளேஸ்டோரில் இருந்து அவற்றை அதிரடியாக நீக்கியுள்ளது:

  • BitFunds – Crypto Cloud Mining
  • Bitcoin Miner – Cloud Mining
  • Bitcoin (BTC) – Pool Mining Cloud Wallet
  • Crypto Holic – Bitcoin Cloud Mining
  • Daily Bitcoin Rewards – Cloud Based Mining System
  • Bitcoin 2021
  • MineBit Pro – Crypto Cloud Mining & btc miner
  • Ethereum (ETH) – Pool Mining Cloud

ஹேக்கர்கள் கிரிப்டோ வர்த்தகர்களை குறிவைத்து பணம் பறிக்கும் முயற்சியில் இறங்கியுள்ளனர். ஏனெனில், பெரும்பாலும் முதலீடு செய்பவர்கள் போதிய முன்னனுபவம் இன்றி முதலீடு செய்வதால், இந்த சூழல்  ஹேக்கர்களுக்கு சாதகமாக அமைந்துள்ளது. 

ஹேக்கர்கள் தங்களின் போலியான செயலிகளை பிளே ஸ்டோரில் பதிவேற்றி முதலீடுகளை பெற முயற்சிக்கின்றனர். அதுமட்டுமில்லாமல், கிரிப்டோ வர்த்தகத்திற்கான போலி ஆப்களுடன், அபாயகரமான தீம்பொருள் மற்றும் விளம்பர மென்பொருளைக் கொண்ட பயன்பாடுகளை நிறுவுமாறு கட்டாயப்படுத்துவதன் மூலம் ஹேக்கர்கள் முதலீடு செய்பவர்களை ஏமாற்றியும் வருகின்றனர்.

கூகிள் தற்போது நீக்கியுள்ள எட்டு செயலிகளும் உண்மையான கிளவுட்-மைனிங் ஆப்கள் போல தோற்றமளிக்கும் போலியான செயலிகள். இவை நல்ல லாபத்தை கொடுப்பதை போல போலியாக விளம்பரம் செய்து முதலீடுகளைப் பெற்று பயனர்களை ஏமாற்றுகின்றனர். 

இந்த பயன்பாடுகள் தங்கள் பயனர்களை விளம்பரங்களைப் பார்க்கச் செய்வதன் மூலமும், சந்தா சேவைகளுக்கு சராசரியாக மாத கட்டணமாக $15 (ரூ.1,115) முதலீடு செய்வதன் மூலமும் பணம் சம்பாதித்து வந்த நிலையில், இப்போது இந்த செயலிகள் தடை செய்யப்பட்டுள்ளன. உங்கள் போனில் நீங்களும் இந்த செயலிகளை இன்ஸ்டால் செய்திருந்தால் உடனே அன்இன்ஸ்டால் செய்துவிடுங்கள். இல்லையென்றால் உங்கள் பணத்தை இழக்க நேரலாம்.

Views: - 448

0

0