ஆக்ஸிஜன் செறிவூட்டிகள் என்றால் என்ன? ஆக்ஸிஜன் சிலிண்டர்களுக்கும் இதற்கும் என்ன வித்தியாசம்?

30 April 2021, 9:04 am
How Do Oxygen Concentrators Work How Are They Different From Oxygen Cylinders
Quick Share

ஆக்ஸிஜன் செறிவூட்டிகள் என்பது இரத்தத்தில் ஆக்ஸிஜன் செறிவு இயல்பை விட குறைவாக இருக்கும் நபர்களுக்கு ஆக்ஸிஜனை வழங்க பயன்படும் ஒரு மருத்துவ சாதனமாகும்.

பொதுவாக, நீங்கள் மருந்து மாத்திரை வாங்குவது போல் ஆக்ஸிஜன் செறிவூட்டிகளை வாங்கிவிட முடியாது. முழுமையாக ஒரு நோயாளியை மருத்துவ மதிப்பாய்வு செய்த பிறகு அவருக்கு தேவை இருந்தால் ஒரு மருத்துவர் அதற்கென பரிந்துரைக்க வேண்டும். பரிந்துரையின் பேரில்  நோயாளிகள் பயணம் செய்யும் போதும், தங்கள் வீடுகளிலும் இந்த செறிவூட்டிகளை எவ்வாறு திறம்பட பயன்படுத்துவது என்பதை மருத்துவர்கள் சொல்லிக் கொடுப்பார்கள்.

ஆக்ஸிஜன் செறிவூட்டிகள் எப்படி செயல்படுகிறது?

ஆக்ஸிஜன் செறிவூட்டிகள் சுற்றியுள்ள காற்றை உள்ளிழுத்து வடிகட்டுகின்றன, அதை தேவையான அடர்த்திக்கு அமுக்கி, பின்னர் சுத்திகரிக்கப்பட்ட மருத்துவ தர ஆக்ஸிஜனை ஒரு Pulse-dose விநியோக முறை அல்லது தொடர்ச்சியான ஸ்ட்ரீம் அமைப்பில் நோயாளிக்கு வழங்குகின்றன.

இந்த மருத்துவ சாதனம் ஸ்பெஷல் ஃபில்டர்கள் மற்றும் சல்லடைகள் ஆகியவற்றைக் கொண்டுள்ளது, இதன் மூலம் காற்றில் இருக்கும் நைட்ரஜனை அகற்ற உதவுகிறது, இது நோயாளிக்கு முற்றிலும் சுத்திகரிக்கப்பட்ட ஆக்ஸிஜனை வழங்குவதை உறுதி செய்கிறது. இந்த சாதனங்கள் மின்னணு பயனர் இடைமுகத்துடன் வருகின்றன, எனவே நீங்கள் ஆக்ஸிஜன் செறிவூட்டிகள் மற்றும் விநியோக அமைப்புகளின் அளவை சரிசெய்ய முடியும். அதன் பிறகு Nasal cannula அல்லது சிறப்பு முகக்கவசம் மூலம் ஆக்ஸிஜனை சுவாசிக்க முடியும்.

பொதுவாக LPM (நிமிடத்திற்கு லிட்டர்) அளவீட்டில் ஆக்சிஜன் செறிவூட்டிகளின் வெளியீட்டை அளவிட முடியும். உங்களுக்கு எந்த அளவிலான ஆக்ஸிஜன் தேவை என்பதை உங்கள் மருத்துவர் தீர்மானிப்பார், இது ஓய்விலும், தூக்கத்திலும், நீங்கள் உடற்பயிற்சி செய்யும் போதும் மாறுபடும்.

ஆக்ஸிஜன் சிலிண்டர்களில் இருந்து ஆக்ஸிஜன் செறிவூட்டிகள் எவ்வாறு வேறுபடுகின்றன?

ஆக்ஸிஜன் சிலிண்டர்கள் மற்றும் ஆக்ஸிஜன் செறிவூட்டிகள் இரண்டுமே ஆக்ஸிஜன் தேவைப்படும் நோயாளிகளுக்கு ஆக்சிஜனை வழங்கும் சாதனங்கள் தான். ஆனால் இரண்டிலும் விநியோக முறைகள் மிகவும் வேறுபட்டவை. இந்தியாவில், ஆக்ஸிஜன் சிலிண்டர்கள் தான் அதிகம் காணப்படுகின்றன, ஆனால் இப்போது ஆக்சிஜன் தட்டுப்பாடு ஏற்பட்டதை அடுத்து அதிக அளவில் ஆக்ஸிஜன் செறிவூட்டிகள் மருத்துவர்கள் மற்றும் நோயாளிகளிடையே பிரபலமாகி வருகிறது.

ஆக்ஸிஜன் சிலிண்டர்கள் அவற்றில் வரையறுக்கப்பட்ட அளவு ஆக்ஸிஜனை மட்டுமே கொண்டிருக்கும் மற்றும் அதில் இருக்கும் வரை தான் நோயாளியால்  ஆக்சிஜனை சுவாசிக்க முடியும். அது தீர்ந்து விட்டால் வேறொரு ஆக்சிஜன் சிலிண்டரை தான் தேட வேண்டியிருக்கும். ஆனால், ஆக்ஸிஜன் செறிவூட்டிகள் அப்படி இல்லை.  

ஆக்ஸிஜன் செறிவூட்டிகள் ஒரு ஏர் கண்டிஷனிங் இயந்திரம் போல செயல்படுகிறது. இது சுற்றுப்புற காற்றை உள்ளிழுத்து, அதை சுத்திகரித்து, மருத்துவ தர  ஆக்சிஜனாக வழங்குகிறது. இது தீர்ந்துவிடும் என்ற கவலையே இல்லை.

நிபுணர்களின் தகவலின்படி, இது LMO (99%) போன்று தூய்மையானது அல்ல, ஆனால் 85% அல்லது அதற்கு மேற்பட்ட ஆக்ஸிஜன் செறிவூட்டிகள் லேசான மற்றும் மிதமான COVID-19 பாசிட்டிவ் நோயாளிகளுக்கு போதுமானதாக இருக்கிறது.

இருப்பினும், ICU நோயாளிகளுக்கு இது ஏற்றதல்ல. ஏனெனில், ஆக்ஸிஜன் செறிவூட்டிகள் நிமிடத்திற்கு 5-10 லிட்டர் ஆக்ஸிஜனை மட்டுமே வழங்க முடியும். சிக்கலான நோயாளிகளுக்கு பொதுவாக நிமிடத்திற்கு 40-50 லிட்டர் தேவைப்படுகிறது. 

செறிவூட்டிகள் சிலிண்டர்களை விட விலை அதிகம். ஒரு ஆக்சிஜன் செறிவூட்டியை வாங்க ரூ.40,000-90,000 வரை செலவிட வேண்டி இருக்கும், அதேசமயம் ஆக்ஸிஜன் சிலிண்டர்களுக்கு அதில் 5 இல் 1 பங்கு விலையிலேயே வாங்கி விட முடியும்.

Views: - 131

0

0

Leave a Reply