உங்கள் வாட்ஸ்அப் Last Seen, Profile Photo, Status போன்றவற்றை மறைப்பது எப்படி?

29 August 2020, 9:52 am
How to change your privacy settings
Quick Share

வாட்ஸ்அப் பயன்படுத்தும் பெரும்பாலானோர் தங்களின் தனியுரிமை விவரங்களான Last Seen, Profile Photo, Status, Read Receipts போன்றவற்றை மறைத்து வைக்க வேண்டும் என்று நினைப்பார்கள். ஆனால், சிலருக்கு அதை எப்படி செய்ய வேண்டும் என்பதில் குழப்பமாக இருக்கும். உங்களுக்கு குழப்பமே இல்லாமல், உங்களின் சந்தேகத்தை தீர்க்கத்தான் இந்தக் காணொளிப் பதிவு. இந்த காணொளியில், உங்கள் வாட்ஸ்அப் தனியுரிமை அமைப்புகள் என்படும் Privacy settings ஐ எப்படி மாற்ற வேண்டும் என்பதைப் பார்க்கலாம்:

பொதுவாக வாட்ஸ்அப் செயலியில் last seen, profile photo, about information, மற்றும் read receipts போன்ற விவரங்கள் Default ஆக இயக்கப்பட்டிருக்கும்.

உங்கள் Status புதுப்பிப்புகள் உங்கள் தொடர்புகளில் உள்ளவர்களுக்குக் காண்பிக்கப்படும்.

உங்கள் எண் வைத்திருக்கும் எவரும் உங்களை குழுக்களில் சேர்க்க முடியும்.

இதையெல்லாம் மாற்ற அடுத்தடுத்து வரும் வழிமுறைகளைப் பின்பற்றுங்கள்:

நீங்கள் Android போன் பயனராக இருந்தால், 

 • மூன்று புள்ளி More Options ஐகானைப் பிரெஸ் செய்யுங்கள். 
 • அடுத்து Settings என்பதையும் 
 • அதில்  Account என்பதையும் 
 • அடுத்து Privacy என்பதையும் பிரெஸ் செய்யுங்கள்.

நீங்கள் ஐபோன் பயனராக இருந்தால், 

 • Settings என்பதைத் தேர்வு செய்து > 
 • அதில் Account என்பதைத் தேர்வுச்  செய்து  > 
 • Privacy Settings என்பதைத்  தேர்வு செய்யுங்கள்.

இப்போது,  இந்த மேற்சொன்ன வழிமுறைகளை நீங்கள் சரியாக பின்பற்றி இருந்தால், உங்கள் வாட்ஸ்அப் Privacy Settings க்குள் க்குள்  வந்திருப்பீர்கள். 

இங்கு  உங்கள் last seen, profile photo, about information, மற்றும் read receipts போன்ற  விவரங்களையும், குரூப் களில் உங்களை யார்  சேர்க்க முடியும் போன்ற அமைப்புகளையும் நீங்கள் மாற்றியமைக்கலாம்.

ஆனால், முக்கியமான சில விஷயங்களும் இருக்குங்க.

 • உங்களுடைய Last Seen ஐ நீங்கள் பகிரவில்லை என்றால், மற்றவர்களின்  Last Seen ஐயும் நீங்கள் பார்க்க முடியாது.
 • நீங்கள் Read Receipt ஐ ஆஃப் செய்துவிட்டால், நீங்கள் அனுப்பும் செய்தியையும் மற்றவர் படித்துவிட்டாரா என்பதைப் பார்க்க உங்களுக்கு அனுமதி இருக்காது. குழு அரட்டைகளுக்கு Read Receipt எப்போதும் அனுப்பப்படும். அதில்  மாற்றங்கள் செய்ய முடியாது.
 • உங்கள் தொடர்பில் இருக்கும் ஒருவர் Read Receiptஐ ஆஃப் செய்திருந்தால், அவர்கள் உங்கள் Status புதுப்பிப்புகளைப் பார்த்தார்களா என்பதை நீங்கள் பார்க்க முடியாது.
 • நீங்கள் Last Seenஐ மறைத்து வைத்தாலும், நீங்கள் ஆன்லைனில் இருக்கும்போது அல்லது டைப் செய்யும் போது Online அல்லது Typing…. என்று  காண்பிக்கும். அதை  மாற்ற வழிகள் இல்லை.

இது போன்று உங்களுக்கு இருக்கும் தொழில்நுட்ப சந்தேகங்களையும் கமெண்டில் பதிவிடுங்கள். அதற்கான விளக்கங்களையும் இன்னொரு காணொளியில் விரைவில்  பார்க்கலாம்.

Views: - 88

0

0