விநாயகர் சதுர்த்தி வாட்ஸ்அப் ஸ்டிக்கர்களை பதிவிறக்கம் செய்து அனுப்புவது எப்படி?

22 August 2020, 8:28 am
How To Download And Send Ganesh Chaturthi WhatsApp Stickers
Quick Share

இந்த ஆண்டு பெரும்பாலான விழாக்கள் குறைந்த முக்கியத்துவம் வாய்ந்தவையாக மாறிவிட்டன மற்றும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதால் எல்லோரும் அவரவர் வீட்டிலேயே கொண்டாட வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது. ஊரடங்குகளில் இருந்து சில தளர்வுகள் அளிக்கப்பட்டாலும், இன்னும் COVID-19 தொற்றுநோயின் காரணமாக வீட்டுக்குள்ளேயே முடங்கி இருக்க வேண்டிய நிலையில் தான் இருக்கிறோம். ஆனாலும், இந்த நன்னாளை கொண்டாடாமல் இருக்க முடியுமா? நம் கையில் போன் இருக்கும்போது நாம் ஏன் சந்தோசங்களைப் பகிர்ந்துக்கொள்ளலாமல் இருக்க வேண்டும். விநாயகர் சதுர்த்தி வாட்ஸ்அப் ஸ்டிக்கர்களை வாட்ஸ்அப் மூலம் பகிர்ந்து உங்கள் அன்பானவரிடம் உங்கள் அன்பைப் பகிர்ந்துக்கொள்வதற்கான வழிகள் இதோ.

வாட்ஸ்அப்பில் இரண்டு இன்-பில்ட் ஸ்டிக்கர்கள் உள்ளன, அவற்றை எல்லா நேரங்களிலும் நாம் பயன்படுத்தலாம். மாற்றாக, நீங்கள் வாட்ஸ்அப்பில் ஸ்டிக்கர்களை பதிவிறக்கம் செய்தும் அனுப்பலாம். பல்வேறு விழாக்களுக்கு, கூகிள் பிளே ஸ்டோர் மற்றும் ஆப்பிள் ஆப் ஸ்டோரில் பிரத்யேக ஸ்டிக்கர்கள் பயன்பாடு உள்ளன. ஆண்ட்ராய்டு மற்றும் iOS போன்களில் இருந்து விநாயகர் சதுர்த்தி வாட்ஸ்அப் ஸ்டிக்கர்களை எவ்வாறு அனுப்புவது என்பதை இங்கே பார்க்கலாம்.

ஆண்ட்ராய்டில் விநாயகர் சதுர்த்தி வாட்ஸ்அப் ஸ்டிக்கர்களை அனுப்புவது எப்படி?

 • கூகிள் பிளே ஸ்டோரைத் திறந்து விநாயகர் சதுர்த்தி (Ganesh Chaturthi stickers) ஸ்டிக்கர்களைத் தேடுங்கள். அனிமேஷன் ஸ்டிக்கர்கள் உட்பட பல விருப்பங்களை நீங்கள் காண்பீர்கள்.
 • உங்களுக்கு விருப்பமான ஒன்றைத் தேர்ந்தெடுத்து பதிவிறக்கவும். அடுத்து, ஸ்டிக்கர்களை வாட்ஸ்அப்பில் பயன்படுத்த அணுமதி அளிக்கவும். 
 • ஈமோஜிஸ் தாவலில் உள்ள ‘+’ ஐகானைக் கிளிக் செய்வதன் மூலம் வாட்ஸ்அப்பில் புதிய ஸ்டிக்கர்கள் பேக்கைக் காண முடியும்.
 • நீங்கள் இப்போது உங்கள் பிடித்த தொடர்புகளுக்கு விநாயகர் சதுர்த்தி வாட்ஸ்அப் ஸ்டிக்கர்களை அனுப்பலாம்.

iOS இல் விநாயகர் சதுர்த்தி வாட்ஸ்அப் ஸ்டிக்கர்களை அனுப்புவது எப்படி?

 • கூகிள் பிளே ஸ்டோருக்கு மாறாக, ஆப்பிள் ஆப் ஸ்டோரில் உள்ள விருப்பங்கள் பெரும்பாலும் குறைவாகவே உள்ளன.
 • Android சாதனங்களுக்கு குறிப்பிட்டுள்ளதைப் போன்ற ஒரு முறையை நீங்கள் பின்பற்றலாம்.
 • நீங்கள் மிகவும் குறைவான விருப்பங்களையே காண்பீர்கள், மேலும் ஸ்டிக்கர்கள் பேக்கிற்கும் நீங்கள் பணம் செலுத்த வேண்டியிருக்கும். இன்னொரு எளிய வழியும் உள்ளது.
 • உங்கள் நண்பரின் Android சாதனத்திலிருந்து சில விநாயகர் சதுர்த்தி ஸ்டிக்கர்களை உங்கள் iOS சாதனத்திற்கு அனுப்பிக்கொள்ளுங்கள்.
 • அதை உங்கள் ஃபேவரைட் பட்டியலில் சேர்த்துக்கொண்டு உங்களுக்கு பிடித்தமானவருக்கு ஸ்டிக்கர்களை அனுப்பி இன்புறுங்கள். 
 • இது தவிர, ஆப் ஸ்டோரிலிருந்து ஸ்டிக்கர் மேக்கர் பயன்பாட்டைப் பயன்படுத்தி iOS இல் விநாயகர் சதுர்த்தி வாட்ஸ்அப் ஸ்டிக்கர்களை நீங்களே கூட தனிப்பயனாக்கலாம்.
 • இதன் மூலம், உங்கள் புகைப்படங்கள் பயன்பாட்டிலிருந்து படத்தைத் தேர்ந்தெடுக்கப்பட்டு, இது ஸ்டிக்கராக மாற்றப்படுகிறது.
 • அடுத்து, புதிய ஸ்டிக்கரைப் பயன்படுத்த நீங்கள் வாட்ஸ்அப்பிற்கு அனுமதி வழங்க வேண்டும்.
 • முடிந்ததும், தனிப்பயனாக்கப்பட்ட விநாயகர் சதுர்த்தி ஸ்டிக்கர்களை உங்கள் தொடர்புகளுக்குப் பகிர்ந்து மகிழலாம்.

Views: - 63

0

0