ஓப்போ மொபைல்களில் ஆப்களை மறைத்து வைப்பது எப்படி? வழிமுறைகள் இதோ!

18 September 2020, 9:55 am
How To Hide Apps In Oppo Mobiles
Quick Share

இப்போதெல்லாம், ஸ்மார்ட்போன்கள் நம் அன்றாட வாழ்க்கைக்கு மிகவும் இன்றியமையாத ஒன்றாக மாறிவிட்டது. ஏனெனில் அவை நம் வேலைகளை எளிதாக்கியுள்ளன. இந்த தொற்றுநோயால், பள்ளிகளுக்கு செல்ல முடியாத மாணவர்கள் ஆன்லைன் முறையில் கல்வி கற்பது முதல் அலுவலக வேலைகள் பார்ப்பது வரை பலவற்றிற்கும் முக்கியமான தேவையாக மாறியுள்ளது. குழந்தைகள் ஆன்லைன் முறையில் கல்வி கற்கும்போது பெற்றோர்கள் பெரும்பாலும் தங்கள் மொபைலில் இருக்கும் சில பயன்பாடுகளைக் குழந்தைகளுக்கு காட்ட விரும்புவதில்லை. அது போன்ற நேரங்களில் நீங்கள் பயன்பாடுகளை மறைத்துவைத்து, தேவைக்கேற்ப பயன்படுத்தலாம்.

ரியல்மீ மற்றும் சியோமியைப் போலவே, ஓப்போ பயனர்களும் விரும்பாத பயன்பாடுகளை எளிதாக மறைக்க முடியும். ஓப்போ கைபேசிகள் பல பயனர்கள் விரும்பாத பல ஆப்களை முன்பே இன்ஸ்டால் செய்து வருகின்றன. எனவே, ஏற்கனவே உள்ளமைக்கப்பட்ட அம்சத்தைப் பயன்படுத்தி உங்கள் ஓப்போ மொபைல்களில் முகப்புத் திரையில் இருந்து பயன்பாடுகளை எவ்வாறு மறைத்து வைப்பது என்பது குறித்த படிப்படியான விவரங்களை இங்கே பார்க்கலாம்.

ஓப்போ மொபைல்களில் ஆப்களை மறைத்து வைப்பது எப்படி? | How To Hide Apps In Oppo Mobiles

1. முதலில் நீங்கள் ‘Settings’ க்கு சென்று பின்னர் ‘Security’ எனும் விருப்பத்தை கிளிக் செய்து ‘App Encryption’ என்பதைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.

2. பின்னர் நீங்கள் மறைக்க விரும்பும் ஆப்பைத் தேர்ந்தெடுக்கவும்.

3. இது ‘Enable Passcode Verification’ விருப்பங்களைக் காண்பிக்கும், பின்னர் நீங்கள் ஒரு எண்ணை அமைக்க வேண்டும்.

4. அணுகல் எண் # உடன் தொடங்கி # உடன் முடிக்கப்பட வேண்டும், நடுத்தர இலக்கத்தில் 1-16 எண்கள் மட்டுமே இருக்க வேண்டும். எ.கா- # 2222 # போன்று அமைக்கலாம். 

5. உங்கள் எண்ணை அமைத்த பிறகு, ‘Done’ எனும் விருப்பத்தைத் தேர்ந்தெடுக்கவும். அவ்வளவுதான் இப்போது ஆப் ஹோம் ஸ்கிரீனிலிருந்து மறைக்கப்படும்.

மறைக்கப்பட்ட பயன்பாட்டை எவ்வாறு முகப்புப் பக்கத்திற்கு கொண்டு வரலாம் என்பதை இப்போது பார்ப்போம்.

1. உங்கள் ஓப்போ தொலைபேசியின் ‘Dialer’ ஐ திறக்கவும்

2. பின்னர் பயன்பாட்டை மறைக்க நீங்கள் முன்பு பயன்படுத்திய எண்ணை அழுத்தவும். இப்போது, ​​உங்கள் முகப்பு பக்கத்தில் பயன்பாட்டைக் காணலாம்.

குறிப்பிடத்தக்க வகையில், இந்த பின்வரும் படிகள் ColorOS 5.0 மற்றும் அதற்கு மேற்பட்ட பயனர்களுக்கு மட்டுமே பொருந்தும். நீங்கள் பழைய பதிப்பைப் பயன்படுத்துகிறீர்கள் என்றால், நீங்கள் அம்சத்தைப் பெற முடியாது என்பதை நினைவில் கொள்க.