தெரிஞ்சுக்கலாம் வாங்க: கூகிள் பே நடத்தும் Go India கேமில் KM பகிர்வது, சேகரிப்பது எப்படி?

10 November 2020, 8:51 am
How To Share KM In Google Pay Go India Game
Quick Share

கூகிள் பே என்பது இந்தியாவில் பெரிய பயனர் தளத்தைக் கொண்ட பிரபலமான கட்டண தளங்களில் ஒன்றாகும். பயனர்களை உற்சாகமாகவும், ஈடுபாட்டுடனும் வைத்திருக்க, கூகிள் பே தனது பயன்பாட்டில் கோ இந்தியா கேமை துவங்கியுள்ளது. கோ இந்தியா கேம் கடந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட தீபாவளி ஸ்டிக்கர்களைப் போன்றது. ஸ்டிக்கர்களைப் போலன்றி, பயனர்கள் இந்த KM மற்றும் நகர டிக்கெட்டுகளை சேகரிக்க வேண்டும்.

Go India : விளையாடுவது எப்படி?

  • கூகிள் பேவில் கோ இந்தியா விளையாட்டை விளையாட, சில எளிய வழிமுறைகள் உள்ளன. 
  • ஒன்று, நீங்கள் Google Pay பயன்பாட்டில் தொடர்ந்து பரிவர்த்தனைகளைச் செய்ய வேண்டும்! கோ இந்தியா வரைபடத்தை பயணிக்கவும் முடிக்கவும் இது உங்களுக்கு அதிக டிக்கெட்டுகளையும் KM களையும் வழங்கும்.
  • விளையாட்டு எளிமையானது மற்றும் Google Pay பயன்பாட்டின் முகப்பு பக்கத்திலேயே இதை அணுக முடியும். 
  • விளையாட்டு பெங்களூரு அல்லது அமிர்தசரஸிலிருந்து தொடங்குகிறது மற்றும் ஒவ்வொரு முறையும் நீங்கள் பணம் அனுப்பும்போது அல்லது பயன்பாட்டில் பில் செலுத்தும் போதும் கூட விளையாட்டு துவங்கும். 
  • வரவேற்பு சலுகையாக, நீங்கள் ஒரு நகர டிக்கெட் அல்லது KM (கிலோமீட்டர்) அல்லது இரண்டையும் பெறுவீர்கள். 
  • நீங்கள் தொடர்ந்து விளையாட விரும்பினால் டிக்கெட்டுகளையும் KM களையும் மேலும் சேகரிக்க வேண்டும். 

KM களை பகிர்வது எப்படி?

  • கோ இந்தியா விளையாட்டில் KM (அல்லது கிலோமீட்டர்) முக்கியமாக சேகரிக்கவேண்டிய ஒன்று. 
  • இது விளையாட்டு முழுவதும் பயணிக்கவும் நகரங்களைப் பார்வையிடவும் உதவுகிறது. 
  • உங்கள் நண்பர்களுடனும் அன்பானவர்களுடனும் நீங்கள் KM ஐ சேகரிக்க அல்லது பகிர்ந்து கொள்ள விரும்பினால், அதை எப்படி செய்வது என்பதை இங்கே பார்க்கலாம். 
  • முதலாவதாக, உங்கள் நண்பர்களுடன் KM ஐ (அல்லது டிக்கெட்) பகிர்ந்து கொள்ள விரும்பினால், அவர்களிடமிருந்து உங்களுக்கு ஒரு கோரிக்கை வர வேண்டும். இது அவர்களின் கணக்கிற்கு நேரடியாக KM ஐ அனுப்ப உங்களுக்கு உதவும்.

KM களை சேகரிப்பது எப்படி?

டிக்கெட் அல்லது KM களை சேகரிப்பதற்கு பல விருப்பங்கள் உள்ளன. குறிப்பிட்டபடி, பரிவர்த்தனைகள் அதிகரிக்கும் போது  விளையாட்டின் KM களை நேரடியாக சேகரிக்க முடியும். இது தவிர, கூகிள் பேவில் KM களைச் சேகரிக்க வேறு சில விருப்பங்களும் உள்ளன. எப்படினு  பார்க்கலாம் வாங்க:

படி 1: கூடுதல் KM உடன் போனஸ் சலுகையைப் பெற உங்கள் நண்பருடன் டிக்கெட்டைப் பகிர்ந்து கொள்ளலாம்

படி 2: உங்களுடன் KM ஐப் பகிர்ந்து கொள்ள நண்பரிடம் கேட்கலாம், இது உங்கள் கணக்கில் KM ஐ நேரடியாக அதிகரிக்கும்.

படி 3: பபுள்ஸைச் சேகரிப்பது KM ஐ சேகரிக்க மற்றொரு வழி ஆகும். கோ இந்தியா பக்கத்தில் குமிழ்கள் மிதப்பதை நீங்கள் காண்பீர்கள், அவற்றைக் கிளிக் செய்து KM களைச் சேர்த்துக்கொள்ளலாம். 

படி 4: ஒவ்வொரு நாளும் உங்கள் கணக்கில் ஆரம்பத்தில் சேர்க்கப்படும் பரிசுகளை சேகரிக்கவும். KM களை சேகரிக்க இதுவும் மற்றொரு வழி.

படி 5: கூகிள் பே பரிவர்த்தனைகள் அல்லது வங்கிக் கணக்கிற்கான தொகை பரிமாற்றம் ஆகியவற்றைத் தவிர, அதிகமான கி.மீ. பெற மற்றொரு வழி உள்ளது. மேலும் KM ஐப் பெற நீங்கள் ஒரு கோ இந்தியா புகைப்படம் அல்லது வரைபடத்தைப் பகிர வேண்டும்.

Views: - 38

0

0