விவசாய கழிவுகளிலிருந்து தயாரான கீபோர்டு சிசர் உடன் HP Spectre x360 14 லேப்டாப் அறிமுகம் | விலை, அம்சங்கள் & விவரங்கள் இதோ

Author: Hemalatha Ramkumar
26 August 2021, 11:44 am
HP Spectre x360 14 laptop launched
Quick Share

கன்வெர்ட்டிபிள் மடிக்கணினிகளின் பிரிவை விரிவுபடுத்தும் நோக்கில், HP புதிய ஸ்பெக்டர் x360 14 மாடலை இந்தியாவில் ரூ.1,19,999 ஆரம்ப விலையில் அறிமுகம் செய்துள்ளது.

இயற்கையான, புதுப்பிக்கத்தக்க விவசாய கழிவுகள் போன்ற பொருட்களிலிருந்து தயாரிக்கப்படும் கீபோர்டு சிசர்களை பயன்படுத்தும் உலகின் முதல் மடிக்கணினி இது தான்.

இந்த சாதனம் 11 வது தலைமுறை இன்டெல் கோர் செயலிகளையும் 17 மணிநேர பேட்டரி லைஃபையும் வழங்கக்கூடியது.

HP ஸ்பெக்டர் x360 14 ஒரு மெல்லிய மற்றும் இலகுரக வடிவமைப்புடன் ஆல் இன் ஒன் கீபோர்டு ஃபிங்கர்பிரிண்ட் ரீடர், கேமரா ஷட்டர் பட்டன், HP காமண்ட் சென்டர் மற்றும் மியூட் மைக் பட்டன் போன்ற பல நவீன அம்சங்களை இந்த லேப்டாப் கொண்டுள்ளது.

மடிக்கணினி 1.36 கிலோ எடை கொண்டது மற்றும் 13.5-இன்ச் WUXGA+ (1920×1280) IPS டச் ஸ்கிரீன் 3: 2, 90.33% ஸ்கிரீன்-டு-பாடி ரேஷியோ மற்றும் 400-நி ட்ஸ் பிரகாசத்துடன் உள்ளது. இதனுடன் OLED டிஸ்ப்ளே ஒரு கூடுதல் விருப்பமாக கிடைக்கும்.

HP ஸ்பெக்டர் x360 14 11 வது தலைமுறை இன்டெல் கோர் i7 செயலி உடன் இயக்கப்படுகிறது, 16 ஜிபி வரை LPDDR4 RAM, 1TB SSD ஸ்டோரேஜ் மற்றும் இன்டெல் ஐரிஸ் Xe கிராபிக்ஸ் உடன் இணைக்கப்பட்டுள்ளது.

இந்த மடிக்கணினி 66Wh பேட்டரியைக் கொண்டுள்ளது மற்றும் 65W பவர் அடாப்டருடன் தொகுக்கப்பட்டுள்ளது. இது குவாட் ஸ்பீக்கர்களை பேங் & ஒலூஃப்சன் ஆடியோ சப்போர்ட் மற்றும் HP ஆடியோ பூஸ்ட் வசதியுடன் வழங்குகிறது.

HP ஸ்பெக்டர் x360 14 இரண்டு தண்டர்போல்ட் 4 போர்ட்கள், ஒரு சூப்பர்ஸ்பீட் யூஎஸ்பி டைப்-A போர்ட், மைக்ரோ-SD மீடியா கார்டு ரீடர், அத்துடன் ஹெட்போன் மற்றும் மைக்ரோஃபோன் காம்போ ஜாக் ஆகியவற்றுடன் பொருத்தப்பட்டுள்ளது. வயர்லெஸ் இணைப்பிற்கு, இது வைஃபை 6 மற்றும் ப்ளூடூத் 5.0 க்கான ஆதரவை வழங்குகிறது.

HP ஸ்பெக்டர் x360 14 லேப்டாப் இந்தியாவில் ஆரம்ப விலையாக ரூ.1,19,999 விலைக்கு கிடைக்கும். இது HP இந்தியாவின் ஆன்லைன் ஸ்டோர், HP வேர்ல்டு ஸ்டோர்ஸ், அமேசான் இந்தியா மற்றும் பிற பங்குதாரர் சில்லறை கடைகள் வழியாக வாங்குவதற்கு கிடைக்கிறது.

இந்த சாதனம் மைக்ரோசாஃப்ட் ஆபிஸ் ஹோம் மற்றும் ஸ்டூடென்ட் 2019 உடன் வருகிறது.

Views: - 331

0

0